Color Scrolling

பசுமையை காப்பதே அவசரக் கடமை!****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.!******மரம்வளர்ப்போம்! மானுடம் காப்போம்!!GREEN COVER IS THE ONLY IMMUNITY AGAINST GLOBAL WARMING !

Scrolling

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com

ஊழல், கறுப்புபணம், விலைவாசி, பணவீக்கம்


“சத்யமேவ ஜெயதே என்பது மக்கள் கவனத்தை ஊழல்/கறுப்பு பணம்/அண்ணா ஹசாரேவிடம் இருந்து திருப்பும் முயற்சி”

  சிறந்த நடுநிலை அரசியல் விமர்சகர் என்று என் நட்பு வட்டத்தில் அறியப்பட்டவர் எனது பதிவுகளை பார்த்துவிட்டு கூறிய கருத்து. பல நேரங்களில் பல பிரச்சனைகளில் நுட்பமாக பகுத்தாய்ந்து தீர்வு சொல்லும் அவரிடம் இருந்து வந்த இந்த விமர்சனம் விவாதத்திற்கு உரியதே. அவரின் கருத்துக்கள்,
“சமூக ஆர்வமுள்ள இளைஞர்களின் கவனம் ஊழல், கறுப்புபணம், விலைவாசி, பணவீக்கம் குறித்து உள்ளது. அவற்றிற்கு எதிராக பெரும் போராட்டம் நடத்துவது அண்ணா/அரவிந்த் கேஜ்ரிவால்/கிரண் பேடி/பாபா ராம்தேவ். இந்த குழுவின் நம்பகத்தன்மையை உடைக்க பயன்பட்ட பல யுக்திகளில் இது புதிய யுக்தி – ஏற்கனவே நமது சமூகத்தில் உள்ள, அரசினை பாதிக்காத அவலங்களை பிரபலத்தின் மூலம் பேசவைப்பதால் ஊழல்/கறுப்புப்பணம் குறித்த மக்கள் கவனம் சிதறடிக்கப்படும், அதுவும் முதலில் பெண்கள் ஆதரவளிக்க கூடிய அவலங்களை பேசுவதால் சீக்கிரம் ரீச் ஆவதும் அவர்களை கொண்டு ஆண்களையும் இழுத்துவிடலாம் என்பது திட்டம்.சுருக்கமாக சொன்னால் அவர்களுக்கு சாதகமான ஒரு பொம்மை எதிரியை அவர்களே உருவாக்கி சமூக ஆர்வலர்களுக்கு டம்மி தலைவரை உருவாக்கும் முயற்சி,பொம்மை லோக்பாலை உருவாகியது போல. பல பொம்மைகள் உள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியும் ஒரு பொம்மை விளையாட்டே”

என்னை பொறுத்தவரை மக்கள் பிரச்சனைகாக போராடும்  அனைவருக்கும் ஆதரவளிக்க வேண்டும். அமீர் கானை இதுபோன்று சூழ்ச்சிக்கு துணை போவார் என்று நினைக்க தோன்றவில்லை.அவரது சமூக ஆர்வத்துக்கு பாராட்டுக்கள். ஊழலுக்கு எதிரான போராட்டம் எந்த வகையிலும் நீர்த்து போய்விட கூடாது என்பதற்கே இந்த பதிவு.
என்ன செயினும் இனி மக்களின் பார்வை ஊழல்/கறுப்பு பண  போராட்டத்தில் இருந்து விலக போவதில்லை என்பது எனது ஆதங்கத்தை மீறிய நம்பிக்கை. ஒருவேளை இது சூழ்ச்சியாக இருப்பினும், இது மேலும் அரசுக்கு புதிய நெருக்கடி கொடுக்கும் நிலையைத்தான் உருவாக்கும்.
                           இணையதள செய்தியாளர் : சசிகுமார்

COMMENTS

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING
HELP US FOR GLOBAL COOLING