Color Scrolling

பசுமையை காப்பதே அவசரக் கடமை!****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.!******மரம்வளர்ப்போம்! மானுடம் காப்போம்!!GREEN COVER IS THE ONLY IMMUNITY AGAINST GLOBAL WARMING !

Scrolling

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com

வங்கி சீர்திருத்த சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு: தமிழகத்தில் மட்டும் 70 ஆயிரம் பணியாளர்கள் வேலை நிறுத்தம்

      மத்திய அரசின் வங்கி சீர்திருத்த சட்ட மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகள், இன்றும், நாளையும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. தமிழகத்தில் மட்டும் எழுபதாயிரம் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எனினும், தனியார் வங்கிகள் மற்றும் ஏ.டி.எம் மையங்கள் வழக்கம் போல் செயல்படும் என இந்திய வங்கிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
சென்னையில் ஆர்ப்பாட்டம் : சென்னையில் உள்ள 1, 400 வங்கி கிளைக்கள் உட்பட தமிழகத்தின் 7, 200 க்கும் அதிகமான கிளைகளில் உள்ள 70 ஆயிரம் பணியாளர்கள் இன்று வேலை நிறுத்தம் மேற்கொண்டுள்ளனர். இரண்டு நாள் வேலைநிறுத்தம் மேற்கொண்டுள்ள வங்கி ஊழியர்கள், சென்னை  மொரியல் ஹால் அருகே ஆர்ப்பாட்டமும் நடத்தினர். மதுரையில் ரயில்வே நிலையம்   எதிரில் உள்ள பாரத ஸ்ட்ட் வங்கியின் தலைமை கிளை வளாகத்தில்  வங்கி ஊரியர்கள் ஒன்று திரண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.  இதே போல் கோவை, திருச்சி, சேலம், ஈரோடு உள்ளிட்ட இடங்களிலும் வங்கி ஊழியர்கள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வங்கிச் சீர்திருத்தம் தொடர்பான வேலைகளில், மத்திய அரசு ஈடுபடத் தொடங்கியதில் இருந்தே, அதன் பல்வேறு முயற்சிகளுக்கு  வங்கிப் பணியாளர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அந்த வகையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 2 நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக இந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் வெங்கடாசலம் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து வங்கிகள் கூட்டமைப்புக்கும், தொழிலாளர் ஆணையத்துக்கும் இடையே நேற்று பேச்சுவார்த்தை நடந்தது. இதில் முடிவு எட்டப்படாததால், திட்டமிட்டபடி, இன்றும், நாளையும் பொதுத்துறை வங்கிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றன.
வங்கிப் பணிகளை அவுட்சோர்சிங் (OUTSOURCING )என்ற பெயரில் வெளியாருக்கு வழங்கக் கூடாது என்பதும் நஷ்டத்தில் இயங்கும் கிராமப்புற வங்கிக் கிளைகளை மூடிவிடும் அரசின் கொள்கையை கைவிட வேண்டும் என்றும் வஙகிப் பணியாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதனிடையே, தனியார் வங்கிகளும், ஏ.டி.எம். மையங்களும் வழக்கம் போல் செயல்படும் என்பதால் பொதுமக்களுக்கு இந்த வேலை நிறுத்தத்தால் பெரியளவில் பாதிப்பு இருக்காது என இந்திய வங்கிகள் கூட்டமைப்பின் தலைமை நிர்வாகி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
-பசுமை நாயகன்

COMMENTS

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING
HELP US FOR GLOBAL COOLING