Color Scrolling

பசுமையை காப்பதே அவசரக் கடமை!****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.!******மரம்வளர்ப்போம்! மானுடம் காப்போம்!!GREEN COVER IS THE ONLY IMMUNITY AGAINST GLOBAL WARMING !

Scrolling

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com

மமதா என்ன முடிவெடுப்பார்.....?

                        டீசல் விலை உயர்வு, சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு உள்ளிட்ட விவகாரங்களில் எடுக்கப்பட்ட முடிவை திரும்பப் பெற முடியாது என மத்திய அரசு அறிவித்து விட்டது. இதுதொடர்பாக மமதா பானர்ஜி விதித்த கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், காங்கிரஸ் சார்பில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த நிலையில்,  கூட்டணியில் நீடிப்பது குறித்து மமதா என்ன முடிவெடுப்பார் என்பது அரசியல் வட்டாரத்தில் உன்னிப்பாக பார்க்கப்படுகிறது.
திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு தொடருமா?ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள முக்கிய அரசியல் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் விடுத்த வேண்டுகோளை ஏற்க மத்திய அரசு மறுத்து விட்டது. டீசல் விலை உயர்வு, சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு வழங்கப்பட்ட அனுமதி ஆகியவற்றை திரும்பப் பெற மாட்டோம் என மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் நேற்று திட்டவட்டமாக அறிவித்தார். இதன் காரணமாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்ளுமா? என்ற கேள்வி விஸ்வரூபமெடுத்துள்ளது. இதுபற்றி கொல்கத்தாவில் இன்று நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் மமதா பானர்ஜி முக்கிய முடிவுகளை எடுப்பார் எனத் தெரிகிறது.
சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி வழங்கியதை, விவசாயிகளுக்கும், மக்களுக்கும் எதிரான நடவடிக்கையாகவே நாங்கள் கருகிறோம். டீசல் விலை உயர்வு முடிவை நாங்கள் ஆதரிக்கவில்லை. பெட்ரோலிய நிறுவனங்களின் கணக்கு, வழக்குகளை மத்திய அரசு கண்காணிக்க வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகர் சுல்தான் அகமது தெரிவித்துள்ளார்.

தயாராகும் காங்கிரஸ் : ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு அளித்து வரும் ஆதரவை, ஒருவேளை திரிணாமுல் காங்கிரஸ் விலக்கிக் கொண்டால், அடுத்த கட்டமாக என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றி காங்கிரஸ் தலைமை நேற்று ஆலோசித்தது. மத்திய அமைச்சர்கள் ஏ.கே. அந்தோணி, ப.சிதம்பரம், சுஷில்குமார் ஷிண்டே, வயலார் ரவி, குலாம் நபி ஆசாத் ஆகியோருடன் சோனியா காந்தி பேச்சுவார்த்தை நடத்தினார். மமதா பானர்ஜியை சமாதானப்படுத்தவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதால், அவர் கூட்டணியில் தொடருவார் என காங்கிரஸ் கட்சி நம்பிக்கை தெரிவித்துள்ளது.
கருத்து முரண்பாடுகள் பற்றி விவாதிப்பது மத்திய அரசின் கடமை என்று நாங்கள் கருதுகிறோம். அந்த வகையில் கூட்டணிக் கட்சிகளுடன் விவாதித்து வருகிறோம் என நினைக்கிறேன். இதுதொடர்பாக நல்ல முடிவு எட்டப்படும் என்று எதிர்பார்க்கிறோம் என்கிறார் காங்கிரஸ் கட்சியின்  ரேணுகா சவுத்ரி.

திரிணாமுல் காங்கிரஸ் இன்று ஆலோசனை : இதனிடையே, காங்கிரஸ் கட்சியுடன் திரிணாமுல் காங்கிரஸ் ரகசிய உடன்பாடு செய்து கொண்டதாக சில ஊடகங்களில் தகவல் வெளியானதற்கு மமதா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். சமூக இணையதளத்தில் மமதா பதிவு செய்துள்ள கருத்தில், ஜனநாயக நாட்டில் இதுபோன்று தவறான செய்திகளை வெளியிடுவது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் எனத் தெரிவித்துள்ள அவர், வர்த்தக நலனுக்காகவே இதுபோன்ற செய்திகள் வெளியிடப்படுவதாக குற்றம்சாட்டினார்.                                                                                                                                                                                                                                             -பசுமை நாயகன்

COMMENTS

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING
HELP US FOR GLOBAL COOLING