Color Scrolling

பசுமையை காப்பதே அவசரக் கடமை!****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.!******மரம்வளர்ப்போம்! மானுடம் காப்போம்!!GREEN COVER IS THE ONLY IMMUNITY AGAINST GLOBAL WARMING !

Scrolling

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com

சோனியா அமெரிக்காவில் மேற்கொண்ட மருத்துவ சிகிச்சைக்காக ரூ.1,880 கோடி செலவு


     குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், மத்திய அரசு தேவையில்ல
ாத செலவுகளை செய்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ரூ. 1880 கோடி வரை செலவிடப்பட்டுள்ளதாக மோடி பரபரப்புக் குற்றச்சாட்டை வைத்துள்ளார். இதற்கு காங்கிரஸ் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது. ஆனால் மோடி விடுவதாக இல்லை. நான் சொல்வது பொய் என்று காங்கிரஸ் நிரூபிக்குமானால் நான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கத் தயார் என்று அவர் அதிரடியாக கூறியுள்ளார்.

இந்த நிலையில், தற்போது காங்கிரஸுக்கு மேலும் ஒரு அதிரடி கேள்வியைப் போட்டுள்ளார் மோடி. இதுகுறித்து அவர் கூறுகையில், காங்கிரஸ் கட்சியும், அன் தலைவர்களும் சோனியா காந்தியின் வெளிநாட்டுப் பயணச் செலவு விவரங்களை கண்டிப்பாக நாட்டு மக்களிடம் தெரிவித்தாக வேண்டும்.

ரூ. 1880 கோடி வரை சோனியாவுக்காக செலவிடப்பட்டிருப்பதாக குஜராத்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. என் மீது பாயும் காங்கிரஸ் கட்சி ஏன் அந்த நாளிதழ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவில்லை...என்று கேட்டுள்ளார்.

சோனியா காந்தி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் முறையாக அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காக சென்றார். அங்கு அறுவை சிகிச்சை நடைபெற்றதாகக் கூறப்பட்டது. ஆனால் சோனியாவுக்கு என்ன நோய் என்றோ அவர் எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் என்றோ கூறப்படவில்லை.

அதன் பின்னர் பிப்ரவரி 27ம் தேதி மீண்டும் அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காக சென்றார். அப்போது அமெரிக்கா வாழ் சீக்கியர்கள் அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

அப்போது சோனியாவின் மருத்துவ சிகிச்சைக்கான பணத்தை யார் கட்டியது என்று அமைச்சர் அம்பிகா சோனியிடம் கேட்கப்பட்டபோது, விரைவில் அறிவிக்கப்படும் என்றார். ஆனால் சொல்லவே இல்லை.

அண்மையில் கடந்த செப்டம்பர் 1ம் தேதியும் சோனியா அமெரிக்கா சென்று ஒருவாரம் இருந்துவிட்டு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.                     -                                                                                                                  பசுமை நாயகன்.  
                                                                                      

COMMENTS

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING
HELP US FOR GLOBAL COOLING