Color Scrolling

பசுமையை காப்பதே அவசரக் கடமை!****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.!******மரம்வளர்ப்போம்! மானுடம் காப்போம்!!GREEN COVER IS THE ONLY IMMUNITY AGAINST GLOBAL WARMING !

Scrolling

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com

சென்னை துறைமுகத்தில் 7ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது

   வங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ள நீலம் புயல் காரணமாக தமிழகத்தின் கடலோரா மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
நாகை, கடலூர், புதுச்சேரி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றும் வீசி வருகிறது. சென்னை துறைமுகத்தில் 7ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது. சென்னை வழியாக புயல் கரை கடக்கவிருப்பதால், 7ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் சின்னத்தால் காசிமேட்டில் கடல்  சீற்றத்துடன் காணப்படுகிறது.  வழக்கத்தை விட கடல் அலைகள் 5 அடி உயரத்திற்கு எழுகின்றன. இதனால் காசிமேடு மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. சுமார் 5ஆயிரம் படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டு்ள்ளதால், மீனவர்கள் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். ஆகவே, அரசு தங்களுக்கு வழங்கும் நிவாரண  உதவியை உடனடியாக அளிக்க வேண்டும் என மீனவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
-பசுமை நாயகன்

COMMENTS

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING
HELP US FOR GLOBAL COOLING