Color Scrolling

பசுமையை காப்பதே அவசரக் கடமை!****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.!******மரம்வளர்ப்போம்! மானுடம் காப்போம்!!GREEN COVER IS THE ONLY IMMUNITY AGAINST GLOBAL WARMING !

Scrolling

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை கனமழை தொடரும்

    ங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் அனேக இடங்களில் நேற்று காலை முதல் காற்றுடன் கூடிய மழை அவ்வப்போது பெய்து வருகிறது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளிலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை அதிகபட்சமாக பழநியில் 9 செண்டி மீட்டர் மழையும், தேனி மாவட்டம் பெரியகுளத்தில் 8 செண்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
இந்நிலையில், தென் கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே, தமிழகத்தில் தொடங்கவுள்ள வடகிழக்குப் பருவமழை கடந்த ஆண்டை விட அதிகளவில் பெய்யும் என கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
குறிப்பாக நெல் சாகுபடி அதிகம் செய்யப்படும் திருவாரூர் மாவட்டத்தில் சராசரி அளவை விட இந்த ஆண்டு 16 சதவிகிதம், அதிக மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வழக்கமாக அக்டோபர் 20ம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்கும். எனவே, இன்னும் ஓரிரு நாளில் மழை தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

COMMENTS

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING
HELP US FOR GLOBAL COOLING