Color Scrolling

பசுமையை காப்பதே அவசரக் கடமை!****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.!******மரம்வளர்ப்போம்! மானுடம் காப்போம்!!GREEN COVER IS THE ONLY IMMUNITY AGAINST GLOBAL WARMING !

Scrolling

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com

கூடங்குளம் அணு உலையில் விஞ்ஞானிகள் ஆய்வு

    கூடங்குளம் அணு உலையில் எஸ்.கே.மேத்தா தலைமையிலான பத்து பேர் அடங்கிய அறிவுரை குழுவினர் இன்று ஆய்வினை தொடங்கியுள்ளனர். இந்த குழு அணு சக்தி ஒருங்குமுறை ஆணையத்தால் ஆகஸ்ட் மாதம் அமைக்கப்பட்டது. கூடங்குளத்திலுள்ள முதலாம் மற்றும் இரண்டாம் அணு உலைகளின் பாதுகாப்பு ஏற்பாடுகளை குறித்து ஆய்வு செய்யும் பணி முதன்மையாக வைக்கப்பட்டு இந்த ஆய்வு நடந்து வருகிறது.
அணு உலையின் ஒட்டுமொத்த பாதுகாப்பு குறித்தும் ஆராயும். அதன் பின் பல்வேறு ஆய்வறிக்கைகளை ஒப்பிட்டு ஒரு விரிவான அறிக்கையை அணு சக்தி ஒழுங்குமுறை ஆணையத்திடம் சமர்பிக்கவுள்ளது. கூடங்குளம் அணு உலை பாதுகாப்பில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்தும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இவர்கள் சமர்பிக்கும் அறிக்கை அடிப்படையிலேயே அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
   63 பேருக்கு ஜாமின் : இந்நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையை முடக்கோரி நடைபெற்ற போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 63பேருக்கு சென்னை உயர் நிதீமன்ற மதுரை கிளை ஜாமின் வழங்கியுள்ளது.கடந்த செப்டம்பர் மாதம் கூடங்குளம் அணு சக்தி எதிர்ப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமாரின் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தின் போது 3 பெண்கள் உட்பட 66பேரை திருநெல்வேலி போலீசார் கைது செய்து வள்ளியூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.
அரசு சொத்துகளை சேதப்படுத்தியது, அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியது உள்ளிட்டவை தொடர்பாக இவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களின் தரப்பில் ஜாமின் கேட்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி மதிவாணன் 63 பேருக்கு ஜாமின் வழங்கினார். 3 பெண்கள் மீது ஏற்கனவே வழக்குகள் உள்ளதால் அவர்களின் ஜாமின் மனுக்களை நீதிபதி தள்ளுபடி செய்தார்.                                                         

                                                                                                                                   -பசுமை நாயகன். 

COMMENTS

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING
HELP US FOR GLOBAL COOLING