Color Scrolling

பசுமையை காப்பதே அவசரக் கடமை!****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.!******மரம்வளர்ப்போம்! மானுடம் காப்போம்!!GREEN COVER IS THE ONLY IMMUNITY AGAINST GLOBAL WARMING !

Scrolling

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com

கர்நாடகாவுக்கு எதிரான வழக்கு : உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

      காவிரி நதிநீர் விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
காவிரி நதி நீர் ஆணையத்தின் உத்தரவுப்படி, தமிழகத்திற்கு கர்நாடகம் 24 நாட்களுக்கு 9 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் செப்டம்பர் 28 ஆம் தேதி உத்தரவிட்டது.
இந்த உத்தரவை மீறி சில நாட்களிலேயே தண்ணீர் திறப்பதை கர்நாடகம் நிறுத்திவிட்டதாக தமிழக அரசு, நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்தது.  நீதிமன்ற உத்தரவை அவமதித்த கர்நாடக முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர், அந்த மாநிலத்தின் நீர்பாசனத்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை, தலைமைச்செயலாளர் ரங்கநாத், பொறியாளர்கள் உள்ளிட்ட 7 பேருக்கு சம்மன் அனுப்பி தண்டிக்க வேண்டும் என்று அந்த மனுவில் தமிழகம் குறிப்பிட்டிருந்தது. அந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற உத்தரவை மறுபரீசிலனை செய்யக்கோரிய கர்நாடக அரசின் மனுவும் இன்று விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் என்ன மாதிரியான உத்தரவு பிறப்பிக்கும் என்ற எதிர் பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, தமிழகத்திற்கு வரும் 15ஆம் தேதி முதல் 31ம் தேதி வரை 8 புள்ளி 75 டிஎம்சி தண்ணீர் வழங்குமாறு நேற்று நடைபெற்ற காவிரி கண்காணிப்புக்குழு கூட்டத்தில் கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த இந்த உத்தரவை ஏற்க கர்நாடகம் மறுத்துவிட்டது.                                                                                                                                      -பசுமை நாயகன். 

COMMENTS

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING
HELP US FOR GLOBAL COOLING