Color Scrolling

பசுமையை காப்பதே அவசரக் கடமை!****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.!******மரம்வளர்ப்போம்! மானுடம் காப்போம்!!GREEN COVER IS THE ONLY IMMUNITY AGAINST GLOBAL WARMING !

Scrolling

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிசுரேஷ் கல்மாடி மீது நடவடிக்கை

         இந்திய ஒலிம்பிக் சங்கம் தொடர்பான அனைத்து வித நடவடிக்கைகளில் இருந்து சுரேஷ் கல்மாடி உள்பட 3 பேரை சஸ்பெண்ட் செய்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு பரிந்துரை செய்துள்ளது. இந்த நடவடிக்கை உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாகவும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது.
கடந்த 2010ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக சுரேஷ் கல்மாடி, வி.கே.வர்மா, லலித் பனோட் ஆகியோர் மீது புகார் கூறப்பட்டது. இதுதொடர்பான வழக்கில் 3 பேரும் சிறைச் சென்று தற்போது ஜாமினில் வெளியே உள்ளனர்.
இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு அடுத்த மாதம் 25ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காமன்வெல்த் புகாரில் சிக்கியுள்ள இவர்கள் 3 பேரும் தேர்தலில் நிற்க முடியுமா என்பது குறித்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் இந்திய ஒலிம்பிக் சங்கம் கருத்து கேட்டிருந்தது.
இதுதொடர்பாக இந்திய ஒலிம்பிக் சங்கம் மூவர் குறித்தும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் விளக்கம் அளித்திருந்தது. இதனை ஏற்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
சுரேஷ் கல்மடி உள்ளிட்ட 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக கருதப்படுகிறது. வி.கே.வர்மா, லலித் பனோட் ஆகியோரும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளனர்.                                                                                                                                                                                                 -பசுமை நாயகன். 

COMMENTS

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING
HELP US FOR GLOBAL COOLING