Color Scrolling

பசுமையை காப்பதே அவசரக் கடமை!****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.!******மரம்வளர்ப்போம்! மானுடம் காப்போம்!!GREEN COVER IS THE ONLY IMMUNITY AGAINST GLOBAL WARMING !

Scrolling

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com

வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு

   ங்க கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயலாக மாறும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் பட்சத்தில் வரும் 31ஆம் தேதி நாகைக்கும் நெல்லூருக்கும் இடையே கரையை கடக்கலாம் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், தமிழக கடற்கரையோர பகுதிகளில் 45 முதல் 55 கி.மீ வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும். கடந்த 25 ஆம் தேதி வங்க கடலில் அந்தமான் நிக்கோபார் தீவிற்கு அருகே காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியது. அது வலுபெற்று நேற்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருமாறியது.
அதனை தொடர்ந்து இன்று காலை ஐந்து 30 மணியளவில் அந்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த மண்டலம் மேற்கு நோக்கி நகர்ந்து இன்று மாலை வடமேற்கு நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால், கடலோர மாவட்டங்களில் கனமழையும், சென்னை உட்பட பிற மாவட்டங்களில் நல்ல மழையும் பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-பசுமை நாயகன்

COMMENTS

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING
HELP US FOR GLOBAL COOLING