Color Scrolling

பசுமையை காப்பதே அவசரக் கடமை!****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.!******மரம்வளர்ப்போம்! மானுடம் காப்போம்!!GREEN COVER IS THE ONLY IMMUNITY AGAINST GLOBAL WARMING !

Scrolling

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com

ரூ.100 கோடி வரி ஏய்ப்பா ? – கேட்பரி நிறுவனத்திடம் விசாரணை

   ற்பத்தி வரிச்சலுகையைத் தவறாகப் பெற்றதன் மூலம், சுமார் 100 கோடி ரூபாய்வரை வரி ஏய்ப்பு செய்ததாக, சாக்லெட் உள்ளிட்ட பல நுகர்பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனமான கேட்பெரி மீது விசாரணை நடந்து வருகிறது.
ஹிமாச்சலப் பிரதேசம் போன்ற மலைப்பகுதிகளில், 2010ம் ஆண்டுக்குமுன் தொடங்கப்பட்ட நிறுவனங்களுக்கு உற்பத்திவரியில் முழுவிலக்கு அளிக்கப்படுகிறது. ஆனால், அந்த மாநிலத்தின் சந்தோலி கிராமத்தில், 2010க்குப் பிறகு தொடங்கப்பட்ட நிறுவனத்துக்கு வரி விலக்கு பெற்றதாக கேட்பரி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுபற்றி உற்பத்தி வரிக்கான பொது இயக்குனரகம் விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது. இதை உறுதிசெய்த கேட்பரி நிறுவன செய்தித் தொடர்பாளர், மேற்கொண்டு விவரங்களைத் தர மறுத்துவிட்டார். எனினும், நாங்கள் இடம்பெறும் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு செயல்படுவது என்பது எங்களது வெற்றியின் ஒரு அங்கம்.
அதனால் விசாரணை அதிகாரிகளுடன் முழுமையாக ஒத்துழைத்து வருகிறோம். இப்போது விசாரணை நடந்து கொண்டிருப்பதால், மேற்கொண்டு இது குறித்து கருத்து தெரிவிக்க இயலாது என்றும் தெரிவித்தார்.

COMMENTS

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING
HELP US FOR GLOBAL COOLING