Color Scrolling

பசுமையை காப்பதே அவசரக் கடமை!****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.!******மரம்வளர்ப்போம்! மானுடம் காப்போம்!!GREEN COVER IS THE ONLY IMMUNITY AGAINST GLOBAL WARMING !

Scrolling

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com

கல்விக் கட்டணம் மறுவரையறை : 387 தனியார் பள்ளிகளுக்கு அனுமதி

        கல்விக் கட்டணம் தொடர்பாக 387 தனியார் பள்ளிகள் தாக்கல் செய்த மனுவின் பேரில், அந்த பள்ளிகளுக்கு கட்டணத்தை மறு வரையறை செய்ய நீதிபதி சிங்காரவேலர் தலைமையிலான பள்ளி கல்விக் கட்டணக் குழு அனுமதி அளித்துள்ளது.
ஆண்டுக்கு 6 சதவிகிதம் வரை உயர்வு என்ற அடிப்படையில் புதிய கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த பள்ளிகளுக்கு கல்விக் கட்டணம் சராசரியாக சுமார் 6 ஆயிரம் ரூபாய் என்றும், போக்குவரத்து கட்டணம் ரூ.11 ஆயிரம் முதல் ரூ.13 ஆயிரம் வரை என்ற அளவிலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்ச்சி விகிதம் மற்றும் உயர் மதிப்பெண்கள் அதிகம் உள்ள நாமக்கல் மாவட்டத்தில் சராசரி கல்விக் கட்டணமாக ரூ.8 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுபோல் கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ.7 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மறுவரையறை கோரிய பள்ளிகளுக்கு மட்டும், 2012 முதல் 2015-ம் ஆண்டு வரை இந்த புதிய கட்டணம் அமலில் இருக்கும். சென்னையில் 14 பள்ளிகள் மறுவரையறை கோரி மனு தாக்கல் செய்திருந்தன
-பசுமை நாயகன்

COMMENTS

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING
HELP US FOR GLOBAL COOLING