Color Scrolling

பசுமையை காப்பதே அவசரக் கடமை!****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.!******மரம்வளர்ப்போம்! மானுடம் காப்போம்!!GREEN COVER IS THE ONLY IMMUNITY AGAINST GLOBAL WARMING !

Scrolling

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com

ஜப்பானில் சூரிய சக்தி பயன்பாடு

   அணு உலை வெடிப்பின் கோர தாண்டவத்தால் பாதிக்கப்பட்ட ஜப்பானியர்கள், மாற்று எரிசக்திக்கு மாறி வருகின்றனர். குறிப்பாக அவர்கள் சூரிய மின்சக்தியை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
புகுஷிமா அணு உலை வெடிப்பைப் பார்த்து உலகமே அச்சத்தில் உறைந்தாலும்  பாதிக்கப்பட்டவர்கள் ஜப்பானியர்கள் மட்டுமே. தற்போது அந்நாட்டில் அணு உலைகள் தேவையா என்ற விவாதம் ஒருபுறம் நடந்துகொண்டிருக்கும் நேரத்தில், சத்தமே இல்லாமல் சூரிய ஒளி மின்சக்தியை பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள் ஒரு கிராமத்தினர்.

  ப்பானில் சுமார் 50 அணு உலைகள் இயங்காத நிலையில்,  ஓஹி நகரத்திலுள்ள  அணுமின் நிலையம் மட்டுமே செயல்பட்டு வருகிறது.
 சூரிய சக்தியை பயன்படுத்திவரும் தம்பா பகுதி கிராம மக்கள், இந்த அணுமின் நிலையத்தின் அருகே தான் வசித்துவருகின்றனர். வருங்காலத்தில் பேரழிவு ஏற்படாது என்பதற்கு என்ன உத்திரவாதம் என கேட்கும் இவர்களது ஒரே கருத்து, அணு உலைகள் வேண்டாம் என்பதே.
சுற்றுச்சூழலுக்கு எந்தவகையிலும் பாதிப்பைத் தராத சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் ஜப்பான் நாட்டின் தம்பா பகுதி கிராமத்தினர், உபரியாக உள்ள மின்சாரத்தை அரசுக்கு வழங்குகின்றனர்.
  தம்பா கிராமத்தை சேர்ந்த ஒருவர், புகுஷிமா பேரழிவு எங்களை நிலைகுலையச் செய்துவிட்டது. அணுசக்தி பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் அல்லது முற்றிலும் தேவையற்றது என்பதே எனது தனிப்பட்ட கருத்து என கூறினார்.

COMMENTS

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING
HELP US FOR GLOBAL COOLING