Color Scrolling

பசுமையை காப்பதே அவசரக் கடமை!****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.!******மரம்வளர்ப்போம்! மானுடம் காப்போம்!!GREEN COVER IS THE ONLY IMMUNITY AGAINST GLOBAL WARMING !

Scrolling

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com

புதிய தலைமைச் செயலகத்தை நீதிமன்றமாக மாற்ற வழக்கு

      டந்த திமுக ஆட்சியின் போது கட்டப்பட்ட தலைமை செயலக கட்டடத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.டிராபிக் ராமசாமி தொடர்ந்துள்ள இந்த வழக்கு தலைமை நீதிபதி இக்பால் மற்றும் நீதிபதி சிவஞானம் ஆகியோர் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
ரூ.1200 கோடி செலவு செய்து கட்டப்பட்ட தலைமைச் செயலக கட்டடம், கடந்த ஒரு ஆண்டு காலமாக வீணாக கிடப்பதாக டிராபிக் ராமசாமி தனது மனுவில் கூறியுள்ளார். மேலும் சென்னை எழும்பூர், சைதாப்பேட்டை பகுதிகளில் உள்ள நீதிமன்ற கட்டடங்கள் மிகவும் பலவீனமாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
எனவே வீணாக கிடக்கும் தலைமைச் செயலக கட்டடத்தில் உயர்நீதிமன்றம் நீங்கலாக ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இது தொடர்பாக தமிழக அரசு இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.
இந்த கட்டடத்தில் குழந்தைகள் நல மருத்துவமனை கட்டப்படும் என்ற தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு ஏற்கனவே நிலுவையில் உள்ளது.
-பசுமை நாயகன்

COMMENTS

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING
HELP US FOR GLOBAL COOLING