Color Scrolling

பசுமையை காப்பதே அவசரக் கடமை!****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.!******மரம்வளர்ப்போம்! மானுடம் காப்போம்!!GREEN COVER IS THE ONLY IMMUNITY AGAINST GLOBAL WARMING !

Scrolling

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com

கர்நாடகா : அணுக் கழிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில் மறியல் போராட்டம்

     கூடங்குளம் அணுக்கழிவுகளை கோலார் தங்க வயலில் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதியைச் சேர்ந்த பாஜகவினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று முழுஅடைப்பு நடைபெற்ற நிலையில், இன்று ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர். அப்போது மத்திய அரசின் முடிவுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக கர்நாடக மாநில துணை முதலமைச்சர் ஈஸ்வரப்பா, உள்ளிட்ட பாஜகவினர் ஆளுநர் பரத்வாஜை சந்தித்து மனு அளித்தனர் . கோலார் தங்கசுரங்கம் அமைந்துள்ள ராபர்ட்சோன்பேட், பங்கார்பேட், சாம்பியன் ரீப்ஸ், ஊரகம், மாரிக்குப்பம், கவுதம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கூடங்குளம் அணுமின்நிலையத்தில் இருந்து வெளியேற்றப்படும் யுரேனியக் கழிவுகளை கொட்டப்போவதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முழுவதும் முழுஅடைப்பு நடைபெற்றது. 
-பசுமை நாயகன்

COMMENTS

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING
HELP US FOR GLOBAL COOLING