Color Scrolling

பசுமையை காப்பதே அவசரக் கடமை!****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.!******மரம்வளர்ப்போம்! மானுடம் காப்போம்!!GREEN COVER IS THE ONLY IMMUNITY AGAINST GLOBAL WARMING !

Scrolling

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com

கூடுதல் மின்சாரம் வழங்கக் கோரிய வழக்கு : உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

      த்திய அரசு கூடுதல் மின்சாரம் வழங்கக் கோரி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மீதான விசாரணை இன்றும் நடைபெறுகிறது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்டமாஸ் கபிர் தலைமையிலான 3 பேர் அடங்கிய அமர்வு முன்பு, நேற்று தமிழக அரசின் மனு விசாரணைக்கு வந்தது.
டெல்லி அரசு திரும்பக் கொடுத்த ஆயிரத்து 700 மெகாவாட் மின்சாரத்தை தமிழகத்திற்கு வழங்க வேண்டும், தெற்கு பகுதிகளுக்கான மின் விநியோக சேவையை சரி செய்ய வேண்டும் என தமிழக அரசின் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்த மனுவை மத்திய மின்சாரத்துறை அமைச்சகத்திற்கு உடனடியாக அனுப்பி வைக்குமாறு தலைமை நீதிபதி உத்தரவிட்டார். தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் குமார், டெல்லி அரசு திரும்ப ஒப்படைத்த மின்சாரத்தை வேறு மாநிலத்திற்கு வழங்க இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று தனது வாதத்தில் குறிப்பிட்டார். இதையடுத்து வழக்கு விசாரணை இன்றைய தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

COMMENTS

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING
HELP US FOR GLOBAL COOLING