Color Scrolling

பசுமையை காப்பதே அவசரக் கடமை!****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.!******மரம்வளர்ப்போம்! மானுடம் காப்போம்!!GREEN COVER IS THE ONLY IMMUNITY AGAINST GLOBAL WARMING !

Scrolling

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com

வைரவிழா கொண்டாட்டம் வரலாற்றில் இடம் பெறும் : முதல்வர்

               தமிழக சட்டசபையின் வைரவிழா சட்டமன்ற பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. விழாவை குடியரசுத்தலைவர் பிரணப் முகர்ஜி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். இந்த விழாவுக்கு முதல்வர் ஜெயலலிதா முன்னிலை வகித்தார். விழாவில் வைரவிழா மலரை தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட அதை குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜி பெற்றுக்கொண்டார்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதி கட்டடத்திற்கு குடியரசுத்தலைவர் பிரணப் முகர்ஜி அடிக்கல் நாட்டி சிறப்புரையாற்றினார். பேரவையில் நடந்த விழாவில் ஆளுநர் ரோசையா மற்றும் அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் ஆகியோரும் பங்கேற்றனர். விழாவில் மறைந்த முன்னாள் பிரதமர் ஐ.கே.குஜ்ராலுக்கு வைரவிழாவில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது
குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜி
விழாவில் பேசிய குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜி அவர்கள், தமிழக சட்டப்பேரவையில் பணியாற்றிய பலர் தேசிய தலைவர்களாக உருவெடுத்தனர் என்றார். மேலும் அவர் நீலம் சஞ்சீவ ரெட்டி, சி. சுப்பிரமணியம் பணியாற்றிய சிறப்பு பெற்றது தமிழக பேரவை என்றும், தமிழ்நாடு என பெயர் மாறுவதற்கு அண்ணா பெரும் முயற்சி மேற்கொண்டார் எனவும் தெரிவித்தார். இந்தியாவில் முதல் முறையாக 1937-ல் விற்பனை வரியை தமிழக பேரவை கொண்டு வந்தது என்றும் குறிப்பிட்டார்.
முதலமைச்சர் ஜெயலலிதா
விழாவில் பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள், சட்டப்பேரவை வைரவிழா கொண்டாட்டம் வரலாற்றில் இடம் பெறும் என்றார். மேலும் அவர், வரலாற்று சிறப்பு மிக்க பல தீர்மானங்கள் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றார்.
ஆளுநர் ரோசையா
பல புகழ்பெற்ற தலைவர்கள் தமிழக சட்டப் பேரவையை அலங்கரித்துள்ளனர் எனஆளுநர் ரோசையா தெரிவித்தார். மேலும் அவர் ராஜாஜி, காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோரை மேற்கோள்காட்டி பேசினா
-பசுமை நாயகன்

COMMENTS

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING
HELP US FOR GLOBAL COOLING