Color Scrolling

பசுமையை காப்பதே அவசரக் கடமை!****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.!******மரம்வளர்ப்போம்! மானுடம் காப்போம்!!GREEN COVER IS THE ONLY IMMUNITY AGAINST GLOBAL WARMING !

Scrolling

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com

நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த எதிர்கட்சிகளுக்கு பிரதமர் வேண்டுகோள்

        சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டு விவகாரம் கொளுந்து விட்டு எரிகிறது எதிர்கட்சியினர் மத்தியில். இந்த நிலையில் நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் கூடுவதால் இரு அவைகளிலும் அனல் பறக்கும் என்பது நிதர்சனம்.
இத்தகைய சூழலில், செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மன்மோகன் சிங் : தேச நலனிற்கு சவாலாக இருக்கும் அனைத்து பிரச்னைகளையும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க தயாராக இருப்பதாகவும், எனவே எதிர்கட்சியினர் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். அரசும், எதிர்கட்சியும் இணைந்து செயல்பட்டு நாடாளுமன்ற தர்மத்தை நிலை நாட்ட வேண்டும் என்றார். சர்வதேச பொருளாதார நெருக்கடியின் எதிரொலியாக இந்தியப் பொருளாதாரத்திற்கு சவாலாக பல பிரச்னைகள் எழுந்திருக்கின்றன. அவற்றை சமாளிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்றார்.
நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவதற்காக முதலில் கூட்டணிக் கட்சியினருக்கும், பின்னர் பிரதான எதிர்கட்சியான பா.ஜ.க.,வினருக்கும் பிரதமர் விருந்து அளித்தார். பிரதமரின் விருந்து வியூகம் இன்னும் தொடர்கிறது. இன்று மீண்டும் பா.ஜ.க., வினருக்கு பிரதமர் விருந்து அளிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

COMMENTS

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING
HELP US FOR GLOBAL COOLING