Color Scrolling

பசுமையை காப்பதே அவசரக் கடமை!****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.!******மரம்வளர்ப்போம்! மானுடம் காப்போம்!!GREEN COVER IS THE ONLY IMMUNITY AGAINST GLOBAL WARMING !

Scrolling

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com

காவிரியில் இருந்து கூடுதலாக 20 டி.எம்.சி. நீர் கேட்டு தமிழகம் மனு

          காவிரி கண்காணிப்பு குழு மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவுப் படி இந்த மாத இறுதிக்குள் 12 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
அந்த மனுவில், காவிரி கண்காணிப்பு குழு உத்தரவுப்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் இந்த 12 டி.எம்.சி. தண்ணீரும் சம்பா பயிரை காப்பாற்ற போதாது என்றும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. எனவே கூடுதலாக 20 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் திறந்து விட உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு டிசம்பர் மாத இறுதிக்குள் 12 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்திற்கு கர்நாடகம் திறக்க வேண்டும் என்று கடந்த 7ம் காவிரி கண்காணிப்புக் குழுவும், தொடர்ந்து உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ஏற்க கர்நாடக அரசு மறுத்து வருகிறது.
பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் : இது தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்துள்ள துணைப் பிரமாணப்பத்திரத்தில், சம்பா பயிரைக் காப்பாற்ற குறைந்த பட்சம் 20 டிஎம்சி தண்ணீர் தேவைப்படுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் டிசம்பர் மாதம் 18ம் தேதி வரை பிலிகுண்டுவுக்கு 9 டிஎம்சியும், மேட்டூர் அணைக்கு 7 டிஎம்சி தண்ணீரும் மட்டுமே வந்துள்ளது.
இந்தத் தண்ணீர் சம்பா பயிரைக் காப்பாற்றப் போதுமானது இல்லை என்பதால், இம்மாத இறுதிக்குள் 20 டிஎம்சி தண்ணீரைத் திறந்து விட கர்நாடகத்துக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
நடுவர் மன்றத்தின் இறுதித்தீர்ப்பு இம்மாத இறுதிக்குள் அரசிதழில் வெளியிடப்படும் என்று காவிரிக் கண்காணிப்புக் குழு கடந்த 7-ம் தேதி கூறியதை முதலமைச்சர் அந்த கடிதத்தில் நினைவுகூர்ந்துள்ளார்.
அரசிதழில் இறுதித் தீர்ப்பு வெளியானதும் காவிரி கண்காணிப்புக் குழு மற்றும் காவிரி நதிநீர் ஆணையம் உள்ளிட்ட அமைப்புகள் கலைக்கப்படும் என்பதையும் தனது கடிதத்தில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
காவிரி கண்காணிப்புக் குழு கூட்டத்தின் முடிவுகளை கருத்தில்க் கொண்ட உச்ச நீதிமன்றம், டிசம்பர் மாதத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நதிநீர் ஒழுங்குமுறைக் குழு ஆகியவற்றை அமைக்க உத்தரவிட்டது என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆனால், இதுவரை காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு, அரசிதழில் வெளியிடப்படவில்லை என்று முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆகவே, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றும் வகையில், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் உடனடியாக வெளியிட வேண்டும் என்றும் புதிய அமைப்புகளை உடனடியாக உருவாக்க வேண்டும் என்றும் தனது கடிதத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
-பசுமை நாயகன்

COMMENTS

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING
HELP US FOR GLOBAL COOLING