Color Scrolling

பசுமையை காப்பதே அவசரக் கடமை!****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.!******மரம்வளர்ப்போம்! மானுடம் காப்போம்!!GREEN COVER IS THE ONLY IMMUNITY AGAINST GLOBAL WARMING !

Scrolling

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com

ரூ 4 ஆயிரம் கோடி கிரனைட் கற்கள் பறிமுதல்: முதலமைச்சர் தகவல்

         மிழகத்தில் சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்பட்ட 4 ஆயிரம் கோடி மதிப்பிலான கிரனைட் கற்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்தார். மேலும் நில அபகரிப்பு வழக்குகளில் இதுவரை 835 கோடியே 94 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் ஜெயலலிதா தெரிவித்தார்.
தலைமைச் செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்களது மாநாட்டை தொடக்கி வைத்து பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா இவ்வாறு கூறினார். தமிழகத்தில் இதுவரை, 1,627 நில அபகரிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார். இதேபோல, சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்பட்ட 4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கிரனைட் கற்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், கிரனைட் முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் 9,783 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் ஜெயலலிதா தெரிவித்தார்.
மேலும், டெங்கி காய்ச்சல் பற்றி மக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்க அரசு எடுத்து வரும் விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்கு மாவட்ட நிர்வாகம் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும், அரசு வெளியிட்டுள்ள சூரிய சக்தி கொள்கையை மக்கள் இயக்கமாக மாற்ற மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக் கொண்டார். கூட்டுறவு சங்கத் தேர்தல்களை அமைதியாக நடத்தவும் மாவட்ட ஆட்சியர்களை அவர் வலியுறுத்தினார்.
-பசுமை நாயகன்

COMMENTS

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING
HELP US FOR GLOBAL COOLING