மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு
கடன் சங்கங்களின் நிதிநிலைமையைச் சீரமைக்க ரூ. 72 கோடி நிதியை வழங்க
முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
தகுதியுள்ள 23 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு அரசு மானியமாக,
ஒரு கோடியே ரூ. 87 லட்சம் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசு
செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ராமநாதபுரம், திருநெல்வேலி, புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட நான்கு மாவட்ட
மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு மானியமாக ரூ.70 கோடியே 8 லட்சத்தை
விடுவிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இந்த நடவடிக்கைகள் மூலம்
கூட்டுறவு கடன் சங்கங்களின் பணிகள் புனரமைக்கப்பட்டு, விவசாயிகளின் நலன்
பாதுகாக்கப்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-பசுமை நாயகன்