Color Scrolling

பசுமையை காப்பதே அவசரக் கடமை!****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.!******மரம்வளர்ப்போம்! மானுடம் காப்போம்!!GREEN COVER IS THE ONLY IMMUNITY AGAINST GLOBAL WARMING !

Scrolling

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com

ஊரை விட்டு ஒதுக்கப்பட்ட குடும்பம்: தொடரும் சமூக அவலம்

        "சாதிகள் இல்லையடி பாப்பா" ... என மகாகவி பாரதியார் பாடியது மெய்ப்பட்டிருக்கிறதா என்றால் கேள்விக்குறி தான் மிஞ்சுகிறது. சமீப காலமாக தமிழகத்தில் சாதிக் கலவரங்கள் தலை தூக்கி வரும் நிலையில், எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் தீண்டாமை கொடுமையும் நிகழ்ந்துள்ளது.
முடிதிருத்தம் செய்ய மறுத்ததால், ஒருவரின் குடும்பமே ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும் சம்பவம் மதுரையில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும் அவரின் வீட்டின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள், அவர்களது குலத் தொழிலைச் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தப்படும் அவலம் தமிழகத்தில் தொடர்கதையாகி வருவது சமூக ஆர்வலரிடையே கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.
மதுரை பழங்காநத்தம் பகுதியில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டம் எதற்காகத் தெரியுமா? சிதம்பரம் என்ற ஒற்றை மனிதருக்காகத்தான். யார் இந்த சிதம்பரம், அவருக்கு என்ன நேர்ந்தது?
மதுரை மேற்கு ஒன்றியத்தில் உள்ளது சின்னப்பட்டி கிராமம். இந்த கிராமத்திலுள்ளவர்கள் அனைவருக்கும் முடி திருத்துபவர்தான் சிதம்பரம். இவர் பரம்பரையாக இதே தொழிலைத்தான் செய்து வந்திருக்கிறார். ஆனால், தற்போது முதுமை காரணமாக அப்பணியைத் தொடர முடியாது என்று கூற, அவரது மருமகனை முடிதிருத்தும் பணியைச் செய்யச் சொல்லி வற்புறுத்தி இருக்கின்றனர் சின்னப்பட்டி கிராமத்தினர். ஆனால், இதனை சிதம்பரம் ஏற்க மறுத்ததால் தொடங்கி இருக்கிறது அவர் மீதான தொடர் தாக்குதல்.
இது குறித்து காவல்துறையினர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது சிதம்பரம் ஆதரவாளர்களின் குற்றச்சாட்டு.
முதுமையின் காரணமாக தொழில் செய்யமுடியவில்லை என்று கூறிய ஒரே காரணத்திற்காக ஒரு குடும்பமே ஒதுக்கி வைக்கப்பட்டிருப்பது சரிதானா என்ற கேள்வி எழாமல் இல்லை.
சாதிகள் அற்ற சமூகம் உருவாகும் கனவு வசப்படுமா?!
-பசுமை நாயகன்

COMMENTS

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING
HELP US FOR GLOBAL COOLING