Color Scrolling

பசுமையை காப்பதே அவசரக் கடமை!****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.!******மரம்வளர்ப்போம்! மானுடம் காப்போம்!!GREEN COVER IS THE ONLY IMMUNITY AGAINST GLOBAL WARMING !

Scrolling

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com

உலகம் அழிந்துவிடுமா ?அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் சொல்வது என்ன?

மாயன் காலண்டர் 2012 ம் ஆண்டு டிசம்பர் 21க்கு பிறகு தேதிகள் குறிக்கப்படாததால், நாளை உலகம் அழிந்துவிடும் என்ற பீதி பரவியுள்ளது. அது முழுக்க முழுக்க வதந்தி என்று கூறுகிறார்கள் விஞ்ஞான உலகத்தினர்.

உலகம் அழிந்துவிடுமா ? : "மாயன் நாட்காட்டி " கடந்த சில ஆண்டுகளாக உலகின் பல்வேறு பகுதி மக்களை ஆட்டிப்படைத்து வரும் வார்த்தை .....தென் அமெரிக்க நாடான மெக்சிகோவில் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மாயன்கள் விட்டுச் சென்ற பல பொக்கிஷங்கள் பல்வேறு துறைகளில் அவர்கள் வல்லவர்கள் என்பதை உணர்த்தி வருகிறது.
மேலும், அவர்கள் வாழ்ந்த காலத்தில் உருவாக்கிய நாட்காட்டி வரும் 21ம் தேதியுடன் நிறைவடைவதால், அன்றைய தினம் உலகம் அழிந்துவிடும் என 2012 என்கிற ஆங்கில திரைப்படத்தி்ல் சித்தரிக்கப்பட்டிருந்தது. இந்த திரைப்படம் ஏற்படுத்திய தாக்கம், உலகம் முழுவதும் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. மாயன் நாட்காட்டிப்படி நடந்துவிடும் என நம்பும் மெக்சிகோ நாட்டு மக்கள், தங்கள் உறவினர்களை தேடிச் செல்லத் தொடங்கியுள்ளனர். ஆனால், மாயன் நாட்காட்டியில் இருப்பது என்ன..அதனால் உலகம் அழிந்துவிடுமா... என்ற கேள்விக்கு என்கிற கேள்விக்கு ஆராய்ச்சியாளர்கள் தெளிவாக விளக்கம்ளி்த்துள்ளனர்....
உலகம் எவ்வாறு அழியும் என்பதை சித்தரிப்பது போன்று, சில வீடியோ காட்சிகள் இணையதளங்களில் பரவிவருவதும் மகக்ளிடையே அச்ச உணர்வை அதிகரிக்கச் செய்துள்ளது. இதனையும் ஆராய்ச்சியாளர்கள் திட்டவட்டமாக மறுக்கின்றனர்.
வதந்தியை நம்ப வேண்டாம் : மேலும், உலகம் அழிந்துவிடும் என்று நாசா நிறுவனம் கூறியுள்ளதாக பரவிவரும் குறுஞ்செய்திகளையும், மின்னஞ்சல்களையும் மறுத்துள்ள நாசா, வதந்திகளை நம்ப வேண்டாம் என்று உறுதிபட தெரிவித்துள்ளது.
-பசுமை நாயகன்

COMMENTS

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING
HELP US FOR GLOBAL COOLING