Color Scrolling

பசுமையை காப்பதே அவசரக் கடமை!****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.!******மரம்வளர்ப்போம்! மானுடம் காப்போம்!!GREEN COVER IS THE ONLY IMMUNITY AGAINST GLOBAL WARMING !

Scrolling

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com

தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம்


  கூடங்குளம் அணு மின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கே வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், கூடங்குளத்தில் மொத்தமாக உற்பத்தியாக உள்ள 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தையும் தமிழகத்திற்கே மத்திய அரசு வழங்கும் என்று எதிர்பார்ப்பதாக ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.
ஆந்திராவில் சிம்ஹத்ரி என்ற இடத்தில் மத்திய அரசுக்கு சொந்தமான தேசிய அனல் மின் நிலையத்தில் இருந்து உற்பத்தியாகும் ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை அந்த மாநிலத்திற்கே வழங்கும் முன்னுதாரனத்தை குறிப்பிட்டுள்ள தமிழக முதல்வர், அதேபோல கூடங்குளத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தையும் மின்சாரம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளார்.
மேலும் நெய்வேலி, கல்பாக்கம் மற்றும் வல்லூரில் மத்திய மின்சார நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் 2 ஆயிரத்து 830 மெகா வாட் மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கே வழங்கவேண்டும் என்றும் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் நிலவும் மின் நிலைமையை கருத்தில் கொண்டு மத்திய மின்சார நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரம் மற்றும் கூடங்குளத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தையும் வழங்க விரைந்து பரிசீலிக்க வேண்டும் என்றும் அதில் பிரதமர் ஆழ்ந்த கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-பசுமை நாயகன்

COMMENTS

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING
HELP US FOR GLOBAL COOLING