Color Scrolling

பசுமையை காப்பதே அவசரக் கடமை!****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.!******மரம்வளர்ப்போம்! மானுடம் காப்போம்!!GREEN COVER IS THE ONLY IMMUNITY AGAINST GLOBAL WARMING !

Scrolling

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com

இறந்த மாணவிக்கு மெழுகு வர்த்தி ஏந்தி பலர் அஞ்சலி

           பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி சிங்கப்பூர் மருத்துவமனையில் மரணமடைந்த மாணவிக்கு இந்தியாவில், பல்வேறு இடங்களில் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.
டெல்லி ஜந்தர் மந்தரில் ஏராளமானோர் கூடி மௌன அஞ்சலி செலுத்தினர். சென்னையில் மெரீனா கடற்கரையில் பலர் மெழுகு வர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். அதே போல் கொல்கத்தாவில் இடதுசாரிக் கட்சியினர் பெருமளவில் திரண்டு மாணவிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பேரணி நடத்தினர்.
மும்பையில் மனிதச் சங்கிலி பேரணியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். அஞ்சலிக்காக திரண்ட பொதுமக்கள், தங்களின் நெற்றி மற்றும் வாயில் கறுப்புத் துணி கட்டி சோகத்தை வெளிப்படுத்தினர். பெங்களூருவிலும் மாணவிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பொதுமக்கள் கறுப்பு உடை அணிந்து அஞ்சலி செலுத்தினர்.
ஒரிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்ற பேரணியில், பெண்களுக்கு எதிராக நடைபெறும் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க கடுமையான சட்டங்கள் கொண்டு வர வலியுறுத்தி முழக்கமிட்டனர். 
-பசுமை நாயகன்

COMMENTS

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING
HELP US FOR GLOBAL COOLING