Color Scrolling

பசுமையை காப்பதே அவசரக் கடமை!****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.!******மரம்வளர்ப்போம்! மானுடம் காப்போம்!!GREEN COVER IS THE ONLY IMMUNITY AGAINST GLOBAL WARMING !

Scrolling

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com

மானிய விலை சிலிண்டர் எண்ணிக்கையை உயர்த்த தேர்தல் ஆணையம் கிடுக்கிப்பிடி

        மானிய விலை எரிவாயு சிலிண்டர் எண்ணிக்கை ஆண்டுக்கு 9ஆக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மத்திய அரசு இந்த முடிவை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தில் சட்டசலை தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு, இந்த முடிவை நிறுத்திவைக்குமாறு மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆண்டொன்றுக்கு 12 சிலிண்டர்கள் என்று இருந்ததை இனி 6 சிலிண்டர்கள் மட்டுமே மானிய விலையில் வழங்கப்படும் என்று மத்திய அரசு சமீபத்தில் கட்டுப்பாடு கொண்டுவந்தது. இந்த முடிவுக்கு பொது மக்களும் பல்வேறு அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரரிவித்து வந்தனர்.
இந்நிலையில் மானிய விலை சிலிண்டர் எண்ணிக்கையை 9ஆக உயர்த்தப்படும் என்றும் இது குறித்து மத்திய அமைச்சரவை இறுதி முடிவு எடுக்கும் என அவர் தெரிவித்தார்.
-பசுமை நாயகன்

COMMENTS

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING
HELP US FOR GLOBAL COOLING