Color Scrolling

பசுமையை காப்பதே அவசரக் கடமை!****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.!******மரம்வளர்ப்போம்! மானுடம் காப்போம்!!GREEN COVER IS THE ONLY IMMUNITY AGAINST GLOBAL WARMING !

Scrolling

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com

கூடங்குளம் அணுஉலைக்கு தடை விதிக்க முடியாது : உச்சநீதிமன்றம்

         கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி செய்ய தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக் கோரி பூவுலகின் நண்பர்கள் தரப்பில் தொடரப்பட்ட வழக்கு இன்று உச்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், தீபக் கிஷன் விசாரித்தனர்.
பூவுலகின் நண்பர்கள் தரப்பில் ஆஜராகி வாதாடிய வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பான வழக்கு விசாரணை நிலுவையில் இருக்கும் போது மத்திய அமைச்சர்கள் சிலர் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி விரைவில் தொடங்கும் என தொடர்ந்து அறிக்கைகள் விடுத்து வருகின்றனர்.
இதற்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார். மேலும் அணுமின் நிலையம் செயல்பட தடை விதிக்க வேண்டும் என்றும் கோரினார். இதற்கு பதிலளித்த நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணை இன்றுடன் முடிவடைதாகவும் தீர்ப்புக்காக வழக்கு ஒத்திவைக்கப்படுவதாகவும் எனவே கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு தடை விதிக்க முடியாது என தெரிவித்தனர்.
கூடங்குளம் அணுக்கழிவுகளை எப்படி பாதுகாப்பது என்பது குறித்து 10 நாட்களுக்குள் மத்திய அரசு விளக்க அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் தேதி அறிவிக்கப்படவில்லை
-பசுமை நாயகன்

COMMENTS

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING
HELP US FOR GLOBAL COOLING