Color Scrolling

பசுமையை காப்பதே அவசரக் கடமை!****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.!******மரம்வளர்ப்போம்! மானுடம் காப்போம்!!GREEN COVER IS THE ONLY IMMUNITY AGAINST GLOBAL WARMING !

Scrolling

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com

பேருந்து படிக்கட்டுகளில் பயணம் செய்தால் மாணவர்கள் நீக்கம்

       பேருந்து படிக்கட்டுகளில் பயணம் செய்யும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இது போன்ற பயணத்தை தொடர்ச்சியாக மேற்கொள்ளும் மாணவர்களை கல்வி நிறுவனங்களில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை பெருங்குடி அருகே கடந்த 10ந்தேதி, அரசு பேருந்து ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, இடையில் உள்ள ஒரு சாலையில் திரும்ப முயன்ற கண்டெய்னர் லார் கட்டுப்பாட்டை இழந்து பின் நோக்கி நகர்ந்தது.
அவ்வாறு வந்த லாரி பேருந்தின் பக்கவாட்டில் மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த மாணவர்கள் நான்கு பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்து தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி பி.எஸ். சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வு தாமாகவே முன் வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
அப்போது, செய்தித்தாளில் வந்த செய்தியை சுட்டிக்காட்டி 10 தினங்களுக்கு ஒருவர் பேருந்து விபத்தில் உயிரிழக்கின்றனர் என்றும், விபத்துகளை முற்றிலுமாக தடுக்க அரசு சார்பில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அரசு தலைமை வழக்கறிஞர் கடந்த 2009-ம் ஆண்டு முதல் பேருந்து விபத்துகளில் உயிரிழக்கும் நபர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தெரிவித்தார்.
பின்னர், மாணவர்கள் பலியான விபத்து குறித்தும், தமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நிலைமை குறித்தும் விளக்கமான அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதனையடுத்து, நேற்று வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது அரசு அளித்த பதில் மனுவில் எதிர்காலத்தில் இது போன்ற விபத்துகள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுப்பதாகவும், படிக்கட்டுகளில் பயணம் செய்வோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப் போவதாகவும், நெரிசல் மிகுந்த பகுதிகளில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்போவதாகவும் உறுதி அளிக்கப்பட்டது.
மேலும் படிக்கட்டுப் பயணங்களால் ஏற்படும் ஆபத்துகள் குறித்த விளம்பரப் பலகைகள் வைக்கப்பட உள்ளதாகவும், பள்ளிகளில் இது குறித்த விழிப்புணர்வு அடங்கிய துண்டுச் சீட்டுகள் வழங்கப்பட இருப்பதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணையின் முடிவில், பேருந்து படிக்கட்டுகளில் தொடர்ந்து பயணம் செய்யும் மாணவர்கள் குறித்து உரிய கல்வி நிறுவனங்களில் காவல்துறையினர் தகவல் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். தொடர்ந்து தவறு செய்யும் மாணவர்களை கல்வி நிலையத்தில் இருந்து நீக்கவும் நடவடிக்கை எடுக்கலாம் என்று அறிவுறுத்தினர்.
இவற்றை நடைமுறைப் படுத்தி வரும் 2ம் தேதி இது குறித்த விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


 
-பசுமை நாயகன்

COMMENTS

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING
HELP US FOR GLOBAL COOLING