Color Scrolling

பசுமையை காப்பதே அவசரக் கடமை!****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.!******மரம்வளர்ப்போம்! மானுடம் காப்போம்!!GREEN COVER IS THE ONLY IMMUNITY AGAINST GLOBAL WARMING !

Scrolling

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com

திருடியதாக கூறி சிறுமிகளுக்கு கம்பத்தில் கட்டி வைத்து அடிஉதை

           சேலத்தில் துணிகளை திருட வந்ததாக கூறி 3 சிறுமிகளை பொதுமக்களே கட்டி வைத்து அடித்திருக்கிறார்கள். 
சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே கல்லாங்குத்து பகுதியில் உள்ள ஒரு தையலகத்தில் துணிகள் திருடு போயின. இந்த நேரத்தில் பழைய துணிகளை வாங்க 4 சிறுமிகள் வந்ததாகவும், அவர்கள் திருட வந்திருப்பதாக கூறி பொதுமக்களே சேர்ந்து கம்பத்தில் கட்டி வைத்து அடித்துள்ளனர். அவர்களில் ஒருவர் தப்பி ஓடி உள்ளார்.
ஆனால், தாங்கள் திருடவில்லை என கூறியும் பொதுமக்கள் அடித்ததாக சிறுமிகள் கதறினர்.
தகவல் அறிந்து சேலம் நகர காவல்துறையினர், சிறுமிகளை விசாரணைக்காக அழைத்துசசென்றனர்.
ஐ.நா. மனித உரிமைகள் தினம் இன்று கடைபிடிக்கப்படுகின்ற நிலையில், சேலத்தில் மனித உரிமைகளை மீறும் வகையில் இவ்வாறு சிறுமிகள் தாக்கப்பட்டிருப்பது சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் மகரபூசணத்தை புதிய தலைமுறை அணுகியபோது, சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த தாசில்தாரை நேரில் அனுப்பி வைத்திருப்பதாக தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்கள் சிறுமிகள் என்பதால் கூடுதல் கவனத்துடன் விசாரித்து வருவதாகவும் தெரிவித்
-பசுமை நாயகன்

COMMENTS

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING
HELP US FOR GLOBAL COOLING