-பசுமை நாயகன்
பெண்களைப் பாதுகாக்கும் முதல்வரின் அறிவிப்புகளுக்கு சமூக ஆர்வலர்கள்,
பெண்ணியவாதிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும் நடவடிக்கைகளைத்
துரிதப்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளனர்.
பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க
வேண்டும் என்ற தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோரிக்கைக்கு பெண்ணியவாதியான
குஷ்பு ஆதரவு தெரிவித்துள்ளார்.
பாலியல் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும்
என பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த தமிழிசை சௌந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
மகளிர் பாதுகாப்புக்காக வெளியாகும் எல்லா அறிவிப்புகளுக்கும் தனது ஆதரவு
எப்போதும் உண்டு என்று தெரிவித்துள்ளார்.
இருப்பினும் மருத்துவ ரீதியாக ஆண்மை நீக்கம் செய்வதில் சில நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும்
என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன்
வலியுறுத்தியுள்ளதோடு குற்ற செயல்களை தடுக்க அனைவரும் விழிப்புடன் செயல்பட
வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
அதே வேளையில் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை அளிக்க
வேண்டும் என்ற தமிழக முதலமைச்சரின் கோரிக்கைக்கு, மூத்த பத்திரிகையாளர்
ஞாநி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-பசுமை நாயகன்