Color Scrolling

பசுமையை காப்பதே அவசரக் கடமை!****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.!******மரம்வளர்ப்போம்! மானுடம் காப்போம்!!GREEN COVER IS THE ONLY IMMUNITY AGAINST GLOBAL WARMING !

Scrolling

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர்


         கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ராமேஸ்வரம் பகுதியில் இருந்து நேற்று 652 படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். நேற்றிரவு 10 மணியளவில் தனுஷ்கோடி, கச்சத்தீவு இடையே கடலில், மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது கற்களை வீசித் தாக்கினர்.
மேலும், மீனவர்களின் 5 படகுகளில் இருந்த மீன்களையும் எடுத்துச் சென்றனர்.
இதுமட்டுமல்லாது, அவர்கள் வைத்திருந்த செல்போன் மற்றும் ஜிபிஎஸ் கருவிகளை இலங்கை கடற்படையினர் பறித்துச் சென்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மீனவர்கள் கரைக்கு திரும்பிக் கொண்டிருந்த நிலையில், இன்று அதிகாலை மீண்டும் குறுக்கிட்ட இலங்கை கடற்படையினர் சுமார் 20 படகுகளில் இருந்து மீன்களை எடுத்துச் சென்றனர். அத்துடன் மீன் பிடிக்கும் வலைகளையும் வெட்டி சேதப்படுத்தியதாக மீனவர்கள் புகார் கூறியுள்ளனர்.
இலங்கை கடற்படையின் இந்த தாக்குதலால் நூற்றுக்கணக்கான மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவம் இந்திய கடல் எல்லைக்குள் நடைபெற்றதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்
-பசுமை நாயகன்
 

COMMENTS

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING
HELP US FOR GLOBAL COOLING