Color Scrolling

பசுமையை காப்பதே அவசரக் கடமை!****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.!******மரம்வளர்ப்போம்! மானுடம் காப்போம்!!GREEN COVER IS THE ONLY IMMUNITY AGAINST GLOBAL WARMING !

Scrolling

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com

ஜான் பென்னி குவிக்கின் நினைவு மணிமண்டபத்தை இன்று முதலமைச்சர் திறந்து வைக்கிறார்.


 தமிழக அரசால் கட்டப்பட்ட ஜான் பென்னி குவிக்கின் நினைவு மணிமண்டபத்தை இன்று முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைக்கிறார். முல்லைப் பெரியாறு அணையை நிர்மாணித்த பிரிட்டிஷ் பொறியாளர் பென்னி குவிக்கின் நினைவாக ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் தேனி லோயர் கேம்பில் மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த விழாவில் பங்கேற்று முதலமைச்ச ஜெயலலிதா மணி மண்டபத்தை திறந்து வைக்கிறார். இதே விழாவில் தமிழ்ப் பேரறிஞர்கள், தலைவர்கள் பெயரினால் ஆன விருதுகளும் வழங்கப்பட உள்ளன. விருது பெறுவர்களின் பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. விருது பெறுவோருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் காசோலை, ஒரு சவரன் தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளன.
 தென்மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் முல்லை பெரியாறு அணையை, வெற்றிகரமாக கட்டி முடித்த ஆங்கிலேய பொறியாளர் பென்னி குயிக்கிற்கு இன்று பிறந்த நாள். தேனி மாவட்டத்தில், தமிழக அரசு சார்பில் அவருக்கு நினைவு மணி மண்டபம் அமைக்கப்பட்டு இன்று திறக்கப்பட உள்ளது. தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கடவுளாக பாவிக்கப்படும் பென்னிகுயிக் ஆற்றிய தொண்டு என்ன ? என்பதை இப்போது பார்க்கலாம்.
லண்டனில் பொறியியல் பட்டம் பெற்ற பென்னி குயிக், பிரிட்டிஷ் ராணுவத்தில் கர்னலாக பணி நியமனம் பெற்றவர். தொடக்கத்தில் புனே நகரில் பணியாற்றி பின் சென்னை மாகாணத்திற்கு மாற்றப்பட்டார். 1850 களில் மதுரை, ராமநாதபுரம், தேனி, உள்ளிட்ட தென் தமிழக பகுதிகள் கடும் வறட்சியால் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வந்தன. மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீர் பெரியாறு வழியாக ஓடி, வீணாக கடலில் கலப்பதைக் கண்ட பென்னி குயிக், இதன் குறுக்காக ஒரு அணை கட்டி, மலையின் வடக்கு பகுதிக்கு மழை நீரை திருப்பி விட்டால் வறண்ட பகுதிகளை பயனுள்ள நிலங்களாக மாற்ற முடியும் என்று திட்டமிட்டார். மதுரையில் இருந்து ஆற்றின் வழியே நடந்து, முல்லையாறும், பெரியாறும் சந்திக்கும் இடத்தில் அணை கட்டலாம் என்று தீர்மானித்து அதற்கான திட்டவரைவை 1882 ஆம் ஆண்டு பென்னி குயிக் தயாரித்தார்.
இந்த திட்டம் ஆங்கிலேய அரசால் ஏற்கப்பட்டு, 1886ம் ஆண்டில் 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அணைகட்ட, திருவாங்கூர் மன்னருடன் 999 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 1887ம் ஆண்டு தொடங்கிய அணையின் கட்டுமானப்பணி, மூன்று ஆண்டுகள் கட்டப்பட்ட நிலையில் தொடர்ந்து பெய்த மழையால் அணை அடித்து செல்லப்பட்டது.இதன் பிறகு இந்த திட்டத்திற்கு கூடுதல் பணம் ஒதுக்கீடு செய்ய ஆங்கிலேய அரசு மறுத்து விட்டது. இதனையடுத்து, தனது சொத்துக்களை விற்றும், நண்பர்கள் மூலம் பணம் திரட்டியும் 1895ம் அணையை வெற்றிகரமாக கட்டி முடித்தார் பென்னி குயிக் முல்லைப்பெரியாறு அணை 1895 ஆம் ஆண்டு அப்போதைய சென்னை மாகாண கவர்னர் லார்டு வென்லாக் என்பவரால் திறந்து வைக்கப்பட்டது.

                                                                            -பசுமை நாயகன்

COMMENTS

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING
HELP US FOR GLOBAL COOLING