Color Scrolling

பசுமையை காப்பதே அவசரக் கடமை!****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.!******மரம்வளர்ப்போம்! மானுடம் காப்போம்!!GREEN COVER IS THE ONLY IMMUNITY AGAINST GLOBAL WARMING !

Scrolling

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com

அறிவுக் களஞ்சியங்களின் விற்பனை


      பொதுவாக, பள்ளி பாடங்களை தாண்டி புத்தகங்கள் படிக்கும் ஆர்வம் மாணவர்களிடம் குறைவு என்றே சொல்லப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டு புத்தக கண்காட்சியில் பாடப் புத்தகங்கள் அல்லாத புத்தகங்கள் நல்ல அளவில் விற்பனை ஆகியுள்ளன.
  தமிழகத்தில் பள்ளி கல்வியின் பாட திட்டம் குறித்து பலமான விவாதங்கள் எழுந்து வரும் நிலையில் மாற்று வழிக் கல்வியை முன்னிறுத்தும் புத்தகங்கள் இந்த ஆண்டு அதிக அளவில் வெளிவந்துள்ளன. அதன் விற்பனையும் சொல்லும் எண்ணிக்கையில் உள்ளதாகவே பதிப்பாளர்கள் கூறுகின்றனர்.
  பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தேவையான பாட புத்தகங்களும், பார்வை நூல்களும் இந்த புத்தக கண்காட்சியில் கிடைக்கின்றன. இருந்த போதிலும் பாடத்தை ஒட்டியும் அதனை மேலும் வலிமைப்படுத்தும் விதத்திலும் உள்ள புத்தகங்கள் மீது மாணவர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதை மெய்ப்பிக்கும் வகையில் encyclopediaக்களின் விற்பனை அதிகரித்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
  கல்லூரி மாணவர்களுக்கான பொறியியல், மருத்துவம் தொடங்கி விண்வெளி ஆராய்ச்சி வரை பல தரப்பட்ட பார்வை நூல்களும் இங்குக் கிடைக்கின்றன. வெறும் பள்ளி மற்றும் கல்லூரி கல்வியோடு மட்டும் ஒரு திறமிக்க மாணவன் நின்றுவிட முடியாது என்பதற்கு இங்குள்ள அறிவு சார் புத்தகங்கள் சான்றாக அமைகின்றன.
                                                     -பசுமை நாயகன்

COMMENTS

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING
HELP US FOR GLOBAL COOLING