Color Scrolling

பசுமையை காப்பதே அவசரக் கடமை!****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.!******மரம்வளர்ப்போம்! மானுடம் காப்போம்!!GREEN COVER IS THE ONLY IMMUNITY AGAINST GLOBAL WARMING !

Scrolling

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com

டெசோ குழு டெல்லி பயணம்


      ஈழத் தமிழர் நலன் தொடர்பான கோரிக்கைகளுடன், ஐ.நா. மனித உரிமை ஆணைய உறுப்பினர்களைச் சந்திக்க தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் தலைமையில் "டெசோ" உறுப்பினர்கள் ஞாயிற்றுக்கிழமை டெல்லி செல்ல இருக்கின்றனர்.
     திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர். பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெசோ அமைப்பில் இடம்பெற்றுள்ள திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், சுப. வீரபாண்டியன், முன்னாள் மத்திய அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் உள்ளிட்டோர் ஸ்டாலிடனுடன் டெல்லி செல்ல இருப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 28 மற்றும் 29-ம் தேதிகளில் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தை சந்தித்து மனு அளிக்கும் இந்தக் குழுவினர், ஐ.நா. மனித உரிமை ஆணைய உறுப்பு நாடுகளின் தூதர்களைச் சந்தித்து மனு அளிக்க இருக்கின்றனர்.

    ஈழத் தமிழர்களுக்கான மறுவாழ்வுப் பணிகளைத் தீவிரப்படுத்துவது, ஈழப் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண்பது உள்ளிட்ட கோரிக்கைகளைக் கொண்ட ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தீர்மானத்தை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று டெசோ குழுவினர் கேட்டுக் கொள்வார்கள் என டி.ஆர்.பாலுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
                                                       -பசுமை நாயகன்

COMMENTS

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING
HELP US FOR GLOBAL COOLING