Color Scrolling

பசுமையை காப்பதே அவசரக் கடமை!****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.!******மரம்வளர்ப்போம்! மானுடம் காப்போம்!!GREEN COVER IS THE ONLY IMMUNITY AGAINST GLOBAL WARMING !

Scrolling

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com

தலைவர் குணசீலனை சிபிஐ அதிகாரிகள் இன்று கைது செய்தனர்.


        னியார் பல் மருத்துவக் கல்லூரி மேற்படிப்புக்கு அங்கீகாரம் வழங்க லஞ்சம் வாங்கியது தொடர்பாக தமிழ்நாடு பல்மருத்துவக் கவுன்சில் தலைவர் குணசீலனை சிபிஐ அதிகாரிகள் இன்று கைது செய்தனர்.
ஏற்கெனவே இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் உறுப்பினர் முருகேசனுடன் குணசீலனுக்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகத்தின் பேரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அடையாறில் உள்ள அவரது வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அதனைத்தொடர்ந்து, குணசீலனை விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து, சிபிஐ அலுவலகத்தில் இன்று ஆஜரான குணசீலனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த விவகாரத்தில் அவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்ததால் அவர் கைது செய்யப்பட்டார்.
பின்னர் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை வரும் 21ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி யூசுப் அலி உத்தரவிட்டார். குணசீலன் தாக்கல் செய்த ஜாமின் மனு மீதான விசாரணையும் 21ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
இவ்வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் உறுப்பினர் முருகேசன் உள்பட 4 பேருக்கு ஜாமின் வழங்க சென்னை சிபிஐ நீதிமன்றம் மறுததுவிட்டது.
                                                             -பசுமை நாயகன்

COMMENTS

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING
HELP US FOR GLOBAL COOLING