Color Scrolling

பசுமையை காப்பதே அவசரக் கடமை!****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.!******மரம்வளர்ப்போம்! மானுடம் காப்போம்!!GREEN COVER IS THE ONLY IMMUNITY AGAINST GLOBAL WARMING !

Scrolling

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com

உண்மைகளை வெளியிடும் ஊடகங்கள் மீது வழக்கு : பா.ஜ கண்டனம்

    பாலியல் வன்கொடுமைகள் தொடர்பான உண்மைகளை வெளியிடும் ஊடகங்கள் மீது டெல்லி காவல்துறை வழக்குத் தொடருவதற்கு பாரதிய ஜனதா தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தமது டிவிட்டர் இணையதளத்தில் எழுதியுள்ள பாரதிய ஜனதா மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், பாலியல் கொடுமைக்குப் பலியான மருத்துவ மாணவியின் நண்பரது பேட்டியை வெளியிட்ட செய்தி தொலைக்காட்சி மீது டெல்லி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்திருப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். ஊடகங்களின் குரல்வளையை நெறிப்பதன் மூலம் மக்களின் குரலை ஒடுக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாரதிய ஜனதா செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத், காவல்துறையினரின் இந்த நடவடிக்கை பத்திரிகை சுதந்திரத்துக்கு எதிரானது என்று கூறியுள்ளார். பாலியல் வன்கொடுமைச் சம்பவம் நிகழ்ந்த பகுதி எந்தக் காவல் நிலையத்தின் எல்லைக்கு உட்பட்டது என்பது குறித்து சுமார் 25 நிமிடம் காவல்துறையினர் வாக்குவாதம் நடத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.
ராம்ஜெத்மலானி உள்ளிட்ட மேலும் சிலரும் டெல்லி காவல்துறையினரின் இந்த நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
 -பசுமை நாயகன்

COMMENTS

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING
HELP US FOR GLOBAL COOLING