Color Scrolling

பசுமையை காப்பதே அவசரக் கடமை!****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.!******மரம்வளர்ப்போம்! மானுடம் காப்போம்!!GREEN COVER IS THE ONLY IMMUNITY AGAINST GLOBAL WARMING !

Scrolling

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com

டீசல், சிலிண்டர் விலை உயரலாம்: பிரதமர் மன்மோகன்சிங்

                 பெட்ரோல், டீசல், மின்சாரம் உள்ளிட்ட எரிசக்தி விலை குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் இன்று தெரிவித்துள்ளார். அவற்றின் மீதான மானியத்தைக் குறைக்க, அவற்றின் விலையை படிப்படியாக அதிகரிப்பது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பான புதிய அறிவிப்பு, மத்திய பட்ஜெட்டில் இடம்பெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
பெட்ரோலிய பொருட்கள் மீதான மானியத்தை முற்றிலும் கைவிடுவதற்கான புதிய அறிவிப்புகளை 2013 -14-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் ப. சிதம்பரம் வெளியிட உள்ளதாக டெல்லியில் நிதித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பெட்ரோல் விலை மீதான கட்டுப்பாட்டை, அரசு ஏற்கனவே கைவிட்ட நிலையில், டீசல் விலையையும் சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயிக்கும் அதிகாரம் அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதுபற்றிய அறிவிப்பும் மத்திய பட்ஜெட்டில் இடம்பெறும் எனத் தெரிகிறது.
இதுதவிர, மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் மீதான மானியத்தையும் முற்றிலும் கைவிடும் வகையில், மாதாந்திர அடிப்படையில் மானியத்தைத் திரும்பப் பெறுவது போன்ற அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
2014 -15-ம் நிதியாண்டுக்குள் மண்ணெண்ணெய் மீதான மானியத்தை 3-ல் ஒரு பங்காகக் குறைக்க இலக்கு உள்ளதாக மத்திய அரசு உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும், விரைவில் டீசல் விலை லிட்டருக்கு 2 முதல் 3 ரூபாய் உயர்த்தப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.
டீசல் விற்பனை மீது லிட்டருக்கு 10 ரூபாய் நஷ்டமடையும் எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோலிய பொருள் விற்பனையில் தினமும் 411 கோடி ரூபாய் இழப்பைச் சந்திப்பதாகவும் உயரதிகாரி தெரிவித்தார்.
 -பசுமை நாயகன்

COMMENTS

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING
HELP US FOR GLOBAL COOLING