Color Scrolling

பசுமையை காப்பதே அவசரக் கடமை!****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.!******மரம்வளர்ப்போம்! மானுடம் காப்போம்!!GREEN COVER IS THE ONLY IMMUNITY AGAINST GLOBAL WARMING !

Scrolling

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com

விதிமீறிய அமைப்புகளுக்கு நோட்டீஸ் புதியதலைமுறை செய்திஎதிரொலி


     கோவை மாவட்டத்தில் வனப்பகுதியையொட்டி விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள தனியார் அமைப்புகளுக்கு தமிழக அரசின் நகர வளர்ச்சி திட்டத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இது தொடர்பாக அத்துறையின் ஆணையர், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈஷா யோகா மையம், இண்டஸ் பொறியியல் கல்லூரி, தாமரா ரிசார்ட்ஸ், சின்மையா சர்வதேச உறைவிடப் பள்ளி, மாதா அமிர்தானந்தாமயி கல்வி நிறுவனம் ஆகியவை போதிய அனுமதியின்றி பெரிய அளவில் கட்டடங்களை கட்டியுள்ளது குறித்தும், அதனால் யானைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் புதிய தலைமுறையில் செய்திகள் வெளியானது.
இந்நிலையில், விதிகளை மீறி கட்டடம் கட்டிய இந்த நிறுவனங்கள், மற்றும் பிளாக் தண்டர் பொழுதுபோக்கு மையம், காருண்யா பல்கலைக்கழகம், காருண்யா சர்வதேசப் பள்ளி, கோவை கலைமகள் கல்லூரி, சான் சர்வதேச வணிகக் கல்லூரி, கோவை மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம், சச்சிதானந்தா ஜோதி நிகேதன், ஈஷா யோகா பள்ளிகள், இவான்ஜலின் மேல்நிலைப்பள்ளி ஆகியவை உட்பட 15 அமைப்புகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
                                         -பசுமை நாயகன்

COMMENTS

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING
HELP US FOR GLOBAL COOLING