Color Scrolling

பசுமையை காப்பதே அவசரக் கடமை!****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.!******மரம்வளர்ப்போம்! மானுடம் காப்போம்!!GREEN COVER IS THE ONLY IMMUNITY AGAINST GLOBAL WARMING !

Scrolling

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com

புதிய ரயில்கள்- பாதைகள் அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு


தென்மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்கள்?
தங்கள் ஊர்களுக்கு புதிய ரயில்கள், பாதைகள் அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு இன்று தாக்கலாக இருக்கும் ரயில்வே நிதிநிலை அறிக்கையில் ஏகத்துக்கும் அதிகமாகி இருக்கிறது. தமிழகத்தில் இருந்து பிற மாவட்டங்களுக்குப் பயணிக்கும் பயணிகள் சந்திக்கும் இன்னல்கள், எதிர்பார்ப்புகள் என்ன?
   சென்னை, கோவை, திருப்பூர் ஆகிய நகரங்களில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பணியாற்றி வருகின்றனர். தீபாவளி, பொங்கல், புத்தாண்டு ஆகிய திருவிழா நேரங்களில் நெல்லை, தூத்துக்குடி செல்லும் ரயில்களில் கால் வைப்பதற்கு கூட இடமிருக்காது. சாதாரண நாட்களிலும் கூட பயணிகள் கூட்டம் நிரம்பி வழியும் நிலை தான் உள்ளது. நெல்லையில் இருந்து சென்னைக்கு ஒரே ஒரு நேரடி ரயில் மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால், சென்னை - நெல்லை இடையே கூடுதல் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.
பகல் நேர ரயில் பகல் கனவுதானா?:              சென்னை - தூத்துக்குடி இடையே இரட்டை ரயில் பாதைத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது ரயில் பயணிகளின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வருகிறது. துறைமுகம், சாலை, விமான நிலையம், ரயில் நிலையம் என அனைத்து வகையான போக்குவரத்து வசதிகளையும் கொண்ட தூத்துகுடியில் ரயில் சேவையை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
தூத்துக்குடியில் இருந்து சென்னை, கோவை, மதுரை, திருவனந்தபுரம் உள்ளிட்ட ஊர்களுக்கு கூடுதலாக ரயில் சேவைகளை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்படுகிறது. மேலும், தூத்துக்குடியில் இருந்து முக்கிய ஊர்களுக்கு பகல்நேர ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கை இன்னும் பகல்கனவாகவே உள்ளது.
எதிர்பார்ப்பில் கோவை, திருப்பூர் மக்கள்:கோவையில் இருந்து சென்னை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களுக்கு நாள்தோறும் ஏராளமான பயணிகளும், ஜவுளி வர்த்தகர்களும் பயணம் செய்கின்றனர். மேலும், கோவை அருகேயுள்ள டாலர் சிட்டி என்று அழைக்கப்படும் திருப்பூருக்கு வந்து செல்லும் வர்த்தகர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உள்ளது. ரயில்களில் இடம் கிடைக்காத நிலையில், பலர் கூடுதல் செலவு செய்து விமானப் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். எனவே, கோவை மற்றும் திருப்பூரில் இருந்து சென்னை, பெங்களூர், மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு நேரடி ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. மேலும், கோவை - திருப்பூர் இடையே ஆயிரக்கணக்கானோர் நாள்தோறும் பயணம் செய்வதால், இந்த நகரங்களுக்கு இடையே பயணிகள் ரயில் சேவையை தொடங்க வேண்டும் என்றும் பொதுமக்கள் விரும்புகின்றனர்.
தவிப்பில் சேலம் வர்த்தகர்கள்: ஜவுளி, ஜவ்வரிசி, மாம்பழம், இரும்பு மற்றும் தானிய வர்த்தகத்தில் சேலம் முக்கியப் பங்கை வகிக்கிறது. இதனால், நாள்தோறும் ஏராளமான வர்த்தகர்கள் சேலத்தில் இருந்து பெங்களூர், கோவை, திருப்பூர், சென்னை, மும்பை ஆகிய நகரங்களுக்கு சென்று வருகின்றனர். ஆனால், அவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ரயில்கள் இயக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர் பொதுமக்கள்.
சேலம் தனி ரயில்வேக் கோட்டமாக இருந்தாலும் சேலம் - எழும்பூர் இடையிலான ஒரே ஒரு ரயில் மட்டுமே இங்கிருந்து நேரடியாக இயக்கப்படுகிறது. இங்கிருந்து வடமாநிலங்களுக்கு வர்த்தகர்கள் சென்றும் வரும் வகையில், புதிய ரயில்கள் அறிவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்படுகிறது. மேலும், இங்கிருந்து தென் மாவட்டங்களுக்கு நேரடி ரயில் இயக்கப்பட வேண்டும் என்றும் பொதுமக்கள் விரும்புகின்றனர்.
தரங்கம்பாடிக்கு தேவை அகலப் பாதை: தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றான தரங்கம்பாடிக்கு ரயில் சேவை இல்லாதது வெளிமாவட்ட மற்றும் வெளிமாநில சுற்றுலாப் பயணிகளுக்கு பெரும் சிரமமாக உள்ளது.
மயிலாடுதுறை - தரங்கம்பாடி இடையே இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயில் 86-ம் ஆண்டு நிறுத்தப்பட்டுவிட்ட நிலையில், தண்டவாளங்களும் அகற்றப்பட்டுவிட்டன. தற்போது அதை அகலப்பாதையாக மேம்படுத்தினால் தரங்கம்பாடியை தமிழகத்தின் முக்கிய நகரங்களுடன் ரயில் சேவையால் இணைக்க முடியும்.
இடம் மாறிய மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ்:தற்போதைய நிலையில், திருச்சியில் இருந்து எந்த ஊருக்கும் நேரடி ரயில் இயக்கப்படவில்லை. திருச்சியில் இருந்து புறப்பட்ட மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் அகலப்பாதைக்காக கும்பகோணத்தில் இருந்து பயணத்தை தொடங்கியது. ஆனால், அகலப்பாதை பணிகள் முடிந்தும், இன்னும் அந்த ரயில் திருச்சிக்கு மாற்றப்படவில்லை. மேலும், திருச்சி வழியே இயக்கப்பட்ட 10 ரயில்களின் சேவையும் நிறுத்தப்பட்டுவிட்டன. இதனால், ரயிலில் இடம் கிடைப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக மலைக்கோட்டை நகர மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், திருச்சி - சென்னை இடையே கூடுதலாக பயணிகள் ரயில் இயக்கப்பட வேண்டும் என்றும், பகல் நேர ரயில் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்றும் திருச்சி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


COMMENTS

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING
HELP US FOR GLOBAL COOLING