Color Scrolling

பசுமையை காப்பதே அவசரக் கடமை!****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.!******மரம்வளர்ப்போம்! மானுடம் காப்போம்!!GREEN COVER IS THE ONLY IMMUNITY AGAINST GLOBAL WARMING !

Scrolling

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ப்ளஸ் டூ தேர்வுகள் இன்று தொடங்குகின்றன.


  
  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ப்ளஸ் டூ தேர்வுகள் இன்று தொடங்குகின்றன. மொத்தம் 8 லட்சத்து 56 ஆயிரம் மாணவ, மாணவிகள் இத்தேர்வை எழுதுகின்றனர்.
  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 5 ஆயிரத்து 769 பள்ளிகளைச் சேர்ந்த 8 லட்சத்து 4 ஆயிரத்து 534 பேரும், தனித்தேர்வர்களாக 48 ஆயிரத்து 788 பேரும் இந்தத் தேர்வினை எழுதுகின்றனர். இதற்காக 2 ஆயிரத்து 20 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
      5 ஆயிரம் பறக்கும் படைகள்:
    தேர்வு எழுதும் மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதை கண்காணிக்கும் பொருட்டு 5 ஆயிரம் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வில் மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதற்கு உதவியாக இருக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

***************************************************************************

ஜெனிவாவில் நடைபெறும் ஐநா மனித உரிமைகள் மாநாட்டில் பேசிய நவநீதம் பிள்ளை



    இலங்கையில் இறுதிக் கட்டப் போரின் போது ஐநா சபை, கடமை தவறிவிட்டதாக ஐநா மனித உரிமைகள் கழக தலைவர் நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார். 
   ஜெனிவாவில் நடைபெறும் ஐநா மனித உரிமைகள் மாநாட்டில் பேசிய நவநீதம் பிள்ளை, போர்கள் மற்றும் பொருளாதார தேக்கநிலையால் கடைநிலையில் உள்ள மக்களுக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதாக கூறினார்.
  தஞ்சம் புகுந்த நாட்டில் தங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை தட்டிக் கேட்க இயலாத அவல நிலையில் அகதிகள் வாடுவதாகவும் அவர் குறிப்பிட்டார். சில நாடுகளில் போரால் இறப்பவர்களைக் காட்டிலும் வன்முறை மற்றும் குற்றச்செயல்களால் அதிகமானோர் உயிரிழப்பதாக அவர் கவலை தெரிவித்தார். இலங்கையில் இறுதிக்கட்டப் போரின் போது, ஐநா சபை அமைப்பு ரீதியில் தோல்வியடைந்துவிட்டதாக நவநீதம் பிள்ளை குறிப்பிட்டார்.
         பெண்ணுரிமைக்கு அதிக முக்கியத்துவம்
    டெல்லி மாணவி படுகொலையைத் தொடர்ந்து நீதிபதி வர்மா குழுவை இந்திய அரசு அமைத்தது. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றச் செயல்களைத் தடுக்க அக்குழுவின் பரிந்துரைகளை இந்தியா செயல்படுத்தும் என்று நம்புகிறேன். இந்தியாவைப் போல உலகின் பல நாடுகளிலும் பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் அதிகமாக நடக்கின்றன.

COMMENTS

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING
HELP US FOR GLOBAL COOLING