Color Scrolling

பசுமையை காப்பதே அவசரக் கடமை!****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.!******மரம்வளர்ப்போம்! மானுடம் காப்போம்!!GREEN COVER IS THE ONLY IMMUNITY AGAINST GLOBAL WARMING !

Scrolling

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com

ரயில்வே பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.


   
  வரும் நிதியாண்டுக்கான ரயில்வே பட்ஜெட் நாடாளுமன்றத்தில்  தாக்கல் செய்யப்பட்டது. ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சால் ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
   17 ஆண்டுகளில் ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்யும் முதல் காங்கிரஸ் அமைச்சர் பவன் குமார் பன்சால் ஆவார். பவன்குமார் பன்சால் ரயில்வே அமைச்சராக பதவியேற்ற பின், தாக்கல் செய்துள்ள முதல் பட்ஜெட் இதுவாகும்.
     
       பவன்குமார் பன்சால் உரையின் சிறப்பு அம்சங்கள்: 
  • நாட்டின் வளர்ச்சிக்கு ரயில்வே துறை முக்கிய பங்கு வகிக்கிறது. தேசத்தை ஒருங்கிணைப்பதில் ரயில்வேயின் பணி மகத்தானது. பயணிகள் பாதுகாப்பில் ரயில்வே கவனம் செலுத்தி வருகிறது.
  • விபத்தே இல்லாத சேவையை ரயில்வே இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறது.
  • ஆளில்லா லெவல் கிராசிங்குகள் இனிமேல் உருவாக்கப்படாது
  • 10,700 ஆளில்லா லெவல் கிராசிங்குகளை நீக்க நடவடிக்கை
  • மாற்றுத் திறனாளிகள் பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கத் திட்டம்
  • காலத்திற்கு ஏற்ப கட்டணங்களை மாற்றி அமைப்பது அவசியம்
  • ரயில் நிலையங்களில் அதி நவீன சமையற்கூடம் அமைக்க திட்டம்
  • இ-டிக்கெட் முறை டிசம்பர் மாதத்திற்குள் நவீனப்படுத்தப்படும்
  • பெண்களுக்கான சிறப்பு மெட்ரோ ரயிலில் பெண் காவலர்கள் நியமனம்
  • நாடு முழுவதும் 104 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படும்
  • காத்திருப்பு நிலவரம் குறித்து உடனுக்குடன் எஸ்எம்எஸ் அனுப்பும் வசதி அறிமுகம்
  • ரயில் பாதுகாப்பு தொடர்பாக 10ஆண்டு திட்டம் அறிமுகப்படுத்தப்படும்
  • முதல் முறையாக அருணாச்சாலப்பிரதேசம் ரயில்வே கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளது
  • கல்வி நோக்கத்துடன் ஆசாதி எக்ஸ்பிரஸ் திட்டம் அறிமுகம்
  • 24 மணி நேரமும் புகார்களை தெரிவிக்க இலவச தொலைபேசி சேவை எண்: 180011132 அறிமுகம்
  • ரயில் நிலைய மேம்பாட்டுக்காக ரூ2000 கோடியில் திட்டம்
  • சுதந்திர போராட்டம் நடைபெற்ற இடங்களை இணைக்கும் வகையில் புதிய ரயில் சேவை திட்டம் செயல்படுத்தப்படும்
  • முன்பதிவில் தாமதத்தை தவிர்க்க IRCTC சேவை துரிதப்படுத்துகிறது.
  • நிமிடத்திற்கு 7200 டிக்கெட் புக் செய்யலாம்
  • பெண் பயணிகள் பாதுகாப்புக்கு புதிதாக 8 கமபெனி படைகள் அமைக்க நடவடிக்கை
  • நலிவடைந்த பிரிவினர் 47000 பேருக்கு வேலைவாய்ப்பு
  • ஆதார் திட்ட தகவல்களை பயன்படுத்திக் கொள்ள ரயில்வே நிர்வாகம் முடிவு
  • அனுபூதி என்ற பெயரில் அதிநவீன ஏசி ரயில் பெட்டிகள் முக்கிய விரைவு ரயில்களில் இணைக்கப்படும்
கடந்த ஜனவரி மாதம், பயணிகள் ரயில் கட்டணம் சுமார் 21 சதவிகிதம் உயர்த்தப்பட்டது.
இந்நிலையில், நாளை பொருளாதார ஆய்வறிக்கையும், அதனைத் தொடர்ந்து 28 ஆம் தேதி, மத்திய பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட உள்ளது.

                                                       -பசுமை நாயகன்


COMMENTS

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING
HELP US FOR GLOBAL COOLING