Color Scrolling

பசுமையை காப்பதே அவசரக் கடமை!****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.!******மரம்வளர்ப்போம்! மானுடம் காப்போம்!!GREEN COVER IS THE ONLY IMMUNITY AGAINST GLOBAL WARMING !

Scrolling

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com

விவசாயத்தின் பங்கு குறையும்- விவசாயத் துறை இணையமைச்சர் தாரிக் அன்வர் தகவல்




     2012 - 13 பயிர் ஆண்டில் இந்தியாவின் தானிய உற்பத்தி 250 மி்ல்லியன் டன்னாக குறையும் என மதிப்பிட்டுள்ளதாக மத்திய விவசாயத் துறை இணையமைச்சர் தாரிக் அன்வர் தெரிவித்தார். முந்தைய 2011-12ம் ஆண்டில் உற்பத்தி வரலாறு காணாத அளவு அதிகரித்து 259 மில்லியன் டன்னாக இருந்தது என்றும் அவர் தெரிவித்தார்.
நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் விவசாயம் மற்றும் அது சார்ந்த பிரிவுகளின் பங்கு 13.7 சதவீதமாக குறைந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். விவசாயம் அல்லாத பிரிவுகளின் வளர்ச்சி அதிகரித்ததே விவசாயத்தின் பங்கு குறைய காரணம் என அமைச்சர் தாரிக் அன்வர் இதற்கு விளக்கம் அளித்தார்.


************************************************************************




இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைப்பு

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ2 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. சர்வதேச அளாவில் கச்சா எண்ணையின் விலை குறைந்ததால் பெட்ரோல் விலை குறைந்துள்ளது.


***********************************************************************************



    லங்கையின் மனித உரிமைகள் பற்றிய ஆய்வு அறிக்கையை ஜெனிவா மாநாட்டில் இலங்கை பிரதிநிதி மகிந்த சமரசிங்கே தாக்கல் செய்தார்.
          அப்போது எல்எல்ஆர்சி அளித்த 91 பரிந்துரைகளை அரசால் செயல்படுத்த முடியவில்லை எனவும் சமரசிங்கே தெரிவித்துள்ளார். மேலும் இறுதிப் போருக்கு பின்னர் 3 லட்சம் அப்பாவித் தமிழர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
    இலங்கை ராணுவத் தாக்குதலால் தனது குடும்பமே பாதிக்கப்பட்டு விட்டதாக காசிபிள்ளை என்பவர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். மேலும் இலங்கையில் தொடர்ந்து மனித உரிமை மீறல்கள் நடைபெற்று வருவதாக குறிப்பிட்ட அவர், ஐ.நா மனித உரிமை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இவர் ஆம்னெஸ்டி சார்பில் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்தார்.
    இலங்கை உச்சநீதிமன்ற நீதிபதி நீக்கப்பட்டது சரியான நடவடிக்கையே எனவும், விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்ட இஸ்லாமியர்கள், சிங்களர்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் போரின் போது காணாமல் போனவர்களை கண்டறியும் பணி விரைவில் முடிவடையும் எனவும் இலங்கை அரசு விளக்கம் தெரிவித்துள்ளது.
     ஆய்வறிக்கை குறித்து பல்வேறு நாடுகள் குறித்து புகாருக்கு இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. 30 ஆண்டு காலமாக இலங்கை அரசு தீவிரவாதத்தை எதிர்த்து வருவதாகவும் சமரசிங்கே குறிப்பிட்டுள்ளார்.
     மேலும் புகார்கள் குறித்து நீதி விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் தனி நாடு அமைக்க தீவிரவாத அமைப்பு போராடியது எனவும், சிறுபான்மை மக்களை விடுதலை புலிகள் கொன்றதாகவும் குறிப்பிட்ட அவர் புத்த இஸ்லாமிய வழிபாட்டு தலங்கள் விடுதலைப் புலிகளால் தாக்கப்பட்டது எனவும் தெரிவித்தார். எனவே தான் விடுதலைப் புலிகளை ஒழிக்க இலங்கை அரசு முடிவு செய்தது எனவும் அவர் தெரிவித்தார்.

COMMENTS

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING
HELP US FOR GLOBAL COOLING