Color Scrolling

பசுமையை காப்பதே அவசரக் கடமை!****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.!******மரம்வளர்ப்போம்! மானுடம் காப்போம்!!GREEN COVER IS THE ONLY IMMUNITY AGAINST GLOBAL WARMING !

Scrolling

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com

இலங்கைக்கு எதிராக 4வது நாளாக நீடிக்கும் போராட்டம்



லங்கைக்கு எதிராக பல்வேறு மாவட்டங்களில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள மாணவர்களின் உண்ணாவிரதம் போராட்டம் தொடர்கிறது. உடல் நிலை பாதிக்கப்பட்ட மாணவர்கள் 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
   லங்கை அதிபர் ராஜபக்சவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், ஈழத் தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
   சென்னையில் அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்கள் 25 பேர் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதம் 4வது நாளை எட்டியுள்ளது. இவர்களில் 4 பேருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால், சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும், உண்ணாவிரதம் தொடரும் என்று மாணவர்கள் அறிவித்துள்ளனர்.
அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்: இலங்கைக்கு எதிராக இந்தியா தனித் தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள 34 மாணவர்களில் 5 பேர் மயக்கமடைந்தனர். இவர்களுக்கு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது 29 மாணவர்கள் 4வது நாளாக போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.
உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள கல்லூரி மாணவர்கள்: சென்னை புதுக்கல்லூரி மாணவர்கள், நெல்லை சேவியர் கல்லூரி, ம.தி.தா. இந்துக் கல்லூரி மாணவர்கள், திருச்சி சட்டக்கல்லூரி மற்றும் கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள், புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரி மாணவர்கள், சிவகங்கை அழகப்பா கலைக் கல்லூரி மாணவர்கள், புதுச்சேரி சட்டக் கல்லூரி மாணவர்களின் காலவரம்பற்ற உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கும்பகோணத்தில் 50க்கும் மேற்பட்ட அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் காலவரம்பற்ற உண்ணாவிரதத்தைத் நேற்று மாலை முதல் தொடங்கியுள்ளனர்.
உணர்வால் ஒன்றுபட்டு..... 
   லங்கையின் போர்க்குற்றங்களை கண்டித்தும், அவற்றுக்கு நீதி கேட்டும் மாணவர்கள் ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்த போராட்டங்களின் மூலம் சர்வதேச அளவில் இலங்கை மீது அழுத்தத்தை ஏற்படுத்தும் முயற்சியை மேற்கொண்டிருக்கிறார்கள் மாணவர்கள். இவர்களில் கோவையில் நடக்கும் மாணவர் போராட்டத்தில் கவனத்தை ஈர்த்து வருகிறார் ஒரு போராட்டக்காரர்.

   ஜெகதீஷ்,உண்ணாவிரதப்பந்தலுக்குள் நுழைந்ததுமே கைத்தட்டல்கள் ஓங்கி ஒலிக்கின்றன. அவரை உண்ணாவிரதம் இருக்கும் மற்ற மாணவர்கள் நெகிழ்ச்சியுடன் வரவேற்று ஊக்குவிக்கிறார்கள்.. யார் இந்த ஜெகதீஷ். அவருக்கு எதற்கு இத்தனை வரவேற்பு என்று ஆச்சரியப்படுபவர்களை மேலும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார் இவர்.. நடமாட இயலாத அளவுக்கு மாற்றுத்திறனாளியான இந்த 21 வயது இளைஞர், தற்போது கோவை பாரதியார் பல்கலைக்கழக மாணவர்களுடன் இணைந்து இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு எதிராக உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். லொயோலா கல்லூரி மாணவர்களின் போராட்டத்தில் பங்கெடுக்க முடியாத நிலையில் கடந்த 3 நாட்களாக வீட்டிலேயே உண்ணாவிரதம் இருந்த ஜெகதீஷ், கோவை மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதை அறிந்து அவர்களுடன் இணைந்திருக்கிறார்.
இணையவழியில் கருத்துக்கள் பதிவு: 10 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தாலும், கோவை அரசுக் கல்லூரி மாணவர்களுக்கு கணினி பயிற்சி கொடுப்பது, தனிப்பட்ட முறையில் மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிப்பது என்று தீவிரமாக இருக்கும் இவர், ஈ மேனேஜ்மெண்ட் என்ற மின்னணு நாளிதழில் இணையாசிரியராகவும் இருக்கிறார். இலங்கை தமிழர்களுக்காக பேஸ்புக், ட்விட்டரில் தொடர்ந்து பதிவுகளை செய்துவரும் ஜெகதீஷ், ஐநாவுக்கும் அடிக்கடி ஈமெயில் மூலம் வேண்டுகோள்களை விடுத்துவருவதை வழக்கமாக வைத்திருக்கிறார். உடல்நிலை காரணமாக 3 வேளையும் உணவை தவிர்க்க முடியாத சூழலில் உள்ளபோதும், அதனை மறுக்கும் ஜெகதீஷ்.. தொடர்ந்து உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளார்.
கோவை மாணவர்களின் எழுச்சி: கோவையில் மொத்தம் 2 இடங்களில் மாணவர்களின் போராட்டம் நீடிக்கிறது. அங்குள்ள மதிமுக அலுவலகத்தில் 18 பேர் உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.. பாரதியார் பல்கலைக்கழகத்தில் தொடர் உண்ணாவிரதத்தில் 24 பேர் பங்கேற்றுள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக தினமும் ஏராளமான மாணவர்கள் ஒருநாள் உண்ணாவிரதத்தை மேற்கொண்டிருக்கிறார்கள்.. போராட்டத்திற்கு மாவட்ட நிர்வாகம் தரப்பில் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை. இதையடுத்து, மாணவர்கள் பேஸ்புக், ட்விட்டர் மற்றும் செல்போனில் எஸ்எம்எஸ் அனுப்பி தங்கள் கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தி வருகிறார்கள்.




**********************************************************************************


போப் தேர்வு 115 கார்டினல்கள் ரகசிய வாக்குப்பதிவு மூலம் அவரை போப்பாக தேர்வு
லக கத்தோலிக்க கிறிஸ்தவ மக்களின் தலைவராக கருதப்படும் போப் பதவிக்கு அர்ஜென்டினாவைச் சேர்ந்த கார்டினல் ஜோர்ஜ் மரியோ பெர்கோக்லியோ தேர்வு செய்யப்பட்டுள்ளார். தென் அமெரிக்காவைச் சேர்ந்த கார்டினல் ஒருவர், போல் பதவிக்கு தேர்வு செய்யப்படுவது இது முதன் முறையாகும். 
   மேலும், அவர் இனி போப் முதலாம் பிரான்சிஸ் என்ற பெயரில் அழைக்கப்படுவார். வாடிகனில் உள்ள சிஸ்டைன் சேபல் தேவாலயத்தில் உலகம் முழுவதும் இருந்து வந்திருந்த 115 கார்டினல்கள் ரகசிய வாக்குப்பதிவு மூலம் அவரை போப்பாக தேர்வு செய்தனர்.
   இதையடுத்து, புதிய போப் தேர்வு செய்யப்பட்டதன் அடையாளமாக அங்குள்ள புகைப்போக்கியில் வெண்புகை வெளியேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து வாடிகன் தேவாலயம் அருகே கூடியிருந்த பொதுமக்கள் ஆரவாரம் எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
   பின்னர், அங்குள்ள மாடத்தில் இருந்தபடி போப் முதலாம் பிரான்சிஸ் மக்களிடையே உரையாற்றினார். உலக அமைதிக்காகவும், சகோதரத்துவம் தழைக்கவும் பிராத்திப்பதாகக் கூறினார். உலகில் அமைதியும், ஒற்றுமையும் நிலவ வேண்டும் என்றும் போப் பிரான்சிஸ் தெரிவித்தார். புதிய போப் ஆண்டவருக்கு, ஐ.நா.பொதுச் செயலாளர் பான் கி மூன், அமெரிக்க அதிபர் ஒபாமா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
புதிய போப்பாக தேர்வு செய்யப்பட்டுள்ள முதலாம் பிரான்சிஸ் குறித்த சில தகவல்கள்:
   அர்ஜென்டினாவைச் சேர்ந்த ஜோர்ஜ் மரியோ பெர்கோக்லியோ என்ற இயற்பெயர் கொண்ட இவரது வயது 76. கடந்த 2001-ல் கார்டினலாக நியமிக்கப்பட்டார். அதற்கு முன்னதாக, இலக்கியம், இறையியல், தத்துவம், உளவியல் ஆகிய பாடங்களை கற்பிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
   கருச்சிதைவுக்கு எதிரான கருத்தை கொண்ட இவர், அர்ஜென்டினாவில் செயல்பட்டு வரும் இடதுசாரி புரட்சியாளர்களை பலமுறை கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், 1976-ல் அந்நாட்டில் நடைபெற்ற சர்வாதிகார ஆட்சிக்கு எதிரான கருத்துகளையும் வெளிப்படையாக தெரிவித்தவர்.
   புதிய போப்பாக தேர்வு செய்யப்பட்டுள்ள முதலாம் பிரான்சிஸ் மிகவும் எளிமையானவர் என போற்றப்படுகிறார். கார்டினலாக நியமிக்கப்பட்ட பின்னரும் அவர் தனக்கான உணவை தானே சமைத்து வந்தார். இவர் சில நேரங்களில் பேருந்துகளிலும் பயணம் செய்வது உண்டு. அர்ஜென்டினாவில் ஏழை மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அவ்வப்போது நேரடியாகச் சென்று அவர்களின் குறைகளை கேட்டறிவார்.
   கடந்த முறையே இவர் போப்பாக தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருந்ததாகவும், 16-ம் பெனடிக்டை அடுத்து இவருக்கு அதிக ஆதரவு இருந்ததாகவும் கூறப்படுகிறது.
   இந்நிலையில், தற்போது இவர் போப்பாக தேர்வு செய்யப்பட்டதன் மூலம், லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்த முதல் போப் என்ற பெருமைக்குரியவராகிறார்.



******************************************************************

அரசு பொது மருத்துவமனையில் ஒருவர் கொலை-கொடுங்கையூரில் பதுங்கி இருந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பிரகாஷ் என்பவர் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
      நேற்று இரவு சுமார் 10.30 மணியளவில் மருத்துவமனைக்குள் புகுந்த 8 பேர்கொண்ட மர்ம கும்பல் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டது. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பிரகாஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    இவர் மீது தண்டையார் பேட்டை காவல் நிலையத்தில் சில வழக்குகள் நிலுவையில் உள்ளதால், இந்த கொலைக்கு முன்விரோதம் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
   இதுதொடர்பாக கொடுங்கையூரில் பதுங்கி இருந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

COMMENTS

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING
HELP US FOR GLOBAL COOLING