Color Scrolling

பசுமையை காப்பதே அவசரக் கடமை!****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.!******மரம்வளர்ப்போம்! மானுடம் காப்போம்!!GREEN COVER IS THE ONLY IMMUNITY AGAINST GLOBAL WARMING !

Scrolling

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com

இலங்கைக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் வலுத்து வருகிறது




      இலங்கைக்கு எதிராக தமிழகத்தில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் வலுத்து வருகிறது. தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களிலும் மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்களின் போராட்டம் காரணமாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு காலவரம்பற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
   ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில், இலங்கையின் போர்க்குற்றம் குறித்து இந்தியா தனித் தீர்மானம் கொண்டுவர வேண்டும், ராஜபக்சவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் 15 பேர் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதப் போராட்டம் 3-வது நாளை எட்டியுள்ளது.
   இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சி சட்டக் கல்லூரி மாணவர்கள், செங்கல்பட்டு சட்டக் கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் 3-வது நாளாக தொடர்கிறது. கோவை சட்டக் கல்லூரி மாணவர்களுடன் இணைந்து அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் நடத்தும் போராட்டம் 3-வது நாளை எட்டியுள்ளது. இதுபோல், புதுச்சேரி கட்டக் கல்லூரி மாணவர்களின் போராட்டமும் 3-வது நாளாக தொடர்கிறது. இப்போராட்டத்திற்கு மற்ற கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
   இதேபோன்று கச்சத்தீவை மீட்க வேண்டும், இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக் கல்லூரி மாணவர்களும் 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
   நெல்லை சேவியர் கல்லூரி மாணவர்கள் நடத்தும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதே கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரி மாணவர்கள் 13 பேர், நேற்று முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
   மாணவர்களின் போராட்டம் தொடர்ந்து தீவிரம் அடைந்து வரும் நிலையில், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு காலவரம்பற்ற விடுமுறையை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் 2-வது நாளாக நேற்றும் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த நிலையில், பல்கலைக்கழகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. தங்கள் போராட்டத்தை பல்கலைக்கழகம் நசுக்க பார்ப்பதாக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தமிழகத்தில் மாணவர்கள் நடத்தும் போராட்டங்கள், மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தும் வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிராக இந்தியா கடுமையான நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என்பதே இப்போராட்டத்தில் இறங்கியுள்ள மாணவர்களின் ஒட்டுமொத்த குரலாக உள்ளது.

##########################################################################################

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள்


 நன்றி: நாசா[/caption]
       செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருந்ததற்கான வாய்ப்புகள் இருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா கூறியுள்ளது. செவ்வாய் கிரகத்துக்கு ஆராய்ச்சிக்காக அனுப்பப்பட்டுள்ள ரோவர் விண்கலமானது அங்கிருந்து பாறைகளின் மாதிரிகளை சேகரித்து கடந்த மாதம் பூமிக்கு அனுப்பியது.
     பாறைகளின் மாதிரிகளை ஆராய்ச்சி செய்ததில் உயிர் வாழ்வதற்கு அடிப்படை வேதிப் பொருட்களான சல்ஃபர், நைட்ரஜன், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், கார்பன் உள்ளிட்டவைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
    மேலும் பாறைகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்ட இடத்தில் முன்னதாக நதியோ அல்லது ஏரியோ இருந்ததும் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து செவ்வாய் கிரகத்தில் முன்னொரு காலத்தில் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான வாய்ப்புகள் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^


கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே ஏரியில் மணல் திருட முயன்றவர்களைப் பிடிக்க முயன்ற அரசு ஊழியர்கள் தாக்கப்பட்டனர்.
     சூளகிரி அருகே கொரல்தொட்டி ஏரியில் சில மாதங்களாக இரவு நேரங்களில் மணல் திருட்டு நடைபெற்று வருவதாக வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
  இன்று அதிகாலை 3.30 மணியளவில் சூளகிரி வருவாய் துறை அதிகாரி ராமமூர்த்தி தலைமையில் 4 பேர் ஏரியில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கட்டிக்கானப்பள்ளி கிராமத்தை சேர்ந்த ராமமூர்த்தியின் தலைமையில் 10-க்கும் மேற்பட்டோர் மணல் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.
   இதுபற்றி அரசு அதிகாரிகள் விசாரித்த போது, இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிவிட்டனர். இதில் காயமடைந்த 4 அதிகாரிகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சூளகிரி காவல்துறையி

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
புதுச்சேரியில் சட்டக்கல்லூரி மாணவர்கள் 3-வது நாளாக உண்ணாவிரதம்


     புதுச்சேரியில் 3-வது நாளாக சட்டக்கல்லூரி மாணவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலையினை கண்டித்து, புதுச்சேரி அம்பேதகர் அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் 2 இடங்களில் காலவரம்பற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
   இலங்கை அதிபர் ராஜபக்சவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், இலங்கை விவகாரத்தில் பன்னாட்டு விசாரனை நடத்தப்பட்டு பொது வாக்கெடுப்பு நடக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம், நடைபெற்று வருகிறது.
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%


 தமிழகம் முழுவதும் சட்டக்கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் நீடிக்கிறது: சென்னையில் 4-வது நாளாக இருப்பதால் சோர்வடைந்தனர்



    ஈழத்தமிழர்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்த இலங்கை அதிபர் ராஜபக்சே மீது பொது விசாரணை நடத்த வேண்டும். இலங்கை மீது பொருளாதார தடைவிதிக்க வேண்டும். 



     இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வருகிற தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். 



   சென்னையில் லயோலா கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியதை அடுத்து தமிழகம் முழுவதும் மாணவர்கள் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். 



   சட்டக்கல்லூரி மாணவர்கள் தமிழகத்தில் பல பகுதிகளில் உண்ணாவிரதம் இருந்து வருவதை தொடர்ந்து அரசு கலைக்கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். 



    3-வது நாளாக சென்னையில் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழக மாணவர்கள் 8 பேர் கடந்த 11-ந் தேதி சாகும் வரை உண்ணாவிரதத்தை தொடங்கினர். புவனேஸ்வரன், சதிஷ்ராஜ். சவுந்திரராஜன், மாணவி மோனிஷா ஆகியோர் மிகவும் சோர்வாக காணப்பட்டனர். இன்று 3-வது நாளாக போராட்டம் நீடித்து வருகிறது. 



    பல்கலைக்கழக வளாகத்தில் உண்ணாவிரதம் இருந்து வரும் அவர்கள் உடல்நிலை மிகவும் சோர்வடைந்தது. மாணவர்கள் தண்ணீர் குறைந்த அளவு குடித்து வருவதால் உடலில் நீர்சத்து குறைந்து வருவதாக அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் தெரிவித்தனர். 



    மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக மேலும் யுவராஜ், பீம்ராஜ் ஆகிய 2 மாணவர்கள் நேற்று முதல் அவர்களுடன் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். இரவு முழுவதும் கொசுக்கடியில் எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் அவர்கள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். கழிவறையை கூட பயன்படுத்தக்கூடாது என்று பல்கலைக்கழகம் கூறியதால் அவர்கள் அருகில் உள்ள நண்பர்கள் வீட்டிற்கு சிறுநீர் கழிக்க செல்லும் நிலை உள்ளது.



    கோவை சட்டக்கல்லூரி மாணவர்களும், கலைக் கல்லூரி மாணவர்களும் இணைந்து ம.தி.மு.க. அலுவலகத்தில் இன்று 3-வது நாளாக உண்ணாவிரதத்தை தொடர்ந்துள்ளனர் சட்டக்கல்லூரி மாணவர் அலாவுதீன், ராஜாகுரு, பாண்டியன் மற்றும் கலைக்கல்லூரி மாணவர் சீனிவாசன் தலைமையில் 23 பேர் சாகும் வரை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 



     திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்கள் 10 பேர், கல்லூரி வளாகத்தில் 2-வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்கள். ராமு, சேதுபதி ஆகியோர் தலைமையில் நடந்து வரும் போராட்டத்திற்கு பல்வேறு கல்லூரி மாணவர்கள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.



    புதுக்கோட்டையில் அரசு மன்னர் கல்லூரி மாணவர்கள் சண்முநாதன், முருகேசன், கார்த்திக், சக்தி வேல், சுரேஷ், ராகுல்சன், சசிசேகர் ஆகிய 7 பேர் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். 



    நெல்லை சட்டக்கல்லூரி மாணவர்கள் 13 பேர் 3-வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள செயிண்ட் சேவியர் கல்லூரி மாணவர்கள் 15 பேர் தொடர்ந்து 3-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். 



     புதுச்சேரி சட்டக்கல்லூரி மாணவர்கள் 15 பேர் சாகும் வரை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 3-வது நாளாக போராட்டம் நீடித்து வருகிறது.

COMMENTS

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING
HELP US FOR GLOBAL COOLING