Color Scrolling

பசுமையை காப்பதே அவசரக் கடமை!****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.!******மரம்வளர்ப்போம்! மானுடம் காப்போம்!!GREEN COVER IS THE ONLY IMMUNITY AGAINST GLOBAL WARMING !

Scrolling

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com
"ரு நாள் போவார் ஒரு நாள் வருவார்
ஒவ்வொரு நாளும் துயரம்......"

     மீனவர் வாழ்க்கை தொன்று தொட்டு இப்படித்தான் இருக்கிறது. அதிலும் தமிழக மீனவர்கள் சந்திக்கும் சவால்களும், சங்கடங்களும் பட்டியலில் அடங்காதவை.
    சென்னை திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த மீனவர் ஆனந்த், நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, வாணிப கப்பல் மோதிய விபத்தில் சமீபத்தில் உயிரிழந்தார். அவரது மரணம், மீனவர்களின் பாதுகாப்பில் இருக்கும் குறைபாடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.
   வாணிபக் கப்பல்களின் அஜாக்கிரதையால் மீனவர்கள் சந்தித்துவரும் பிரச்சனைகள் ஏராளம். கடந்த 16 ஆம் தேதி, நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது வாணிபக் கப்பல் மோதியதில், ஆனந்த் என்ற மீனவர் கடலில் மூழ்கி, காணாமல் போனார். ஐந்து நாட்கள் தேடுதலுக்கு பிறகு அவரது உடலை மீனவர்கள் கண்டுபிடித்தனர். மீனவர் ஆனந்தின் மரணம் அவரது குடும்பத்தினரை உலுக்கியுள்ளது. அவரது குடும்பம் இப்போது கண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
    நடுக்கடலில் மீனவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது, சென்னை துறைமுக முகப்புக்குள் நுழைந்த மேற்கு இந்திய தீவைச் சேர்ந்த வாணிபக் கப்பல் மீனவர்களின் படகு மீது மோதியது. இந்த விபத்திற்கு, அந்த கப்பலின் அஜாக்கிரதையே காரணம் என ஆனந்த்துடன் விபத்தில் சிக்கி உயிர் பிழைத்த விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
 
 இந்த விபத்து தொடர்பாக வாணிபக் கப்பலைச் சேர்ந்த கேப்டன் உள்ளிட்ட இரண்டு அதிகாரிகளை போலீசார் கைது செய்துள்ளனர். ஆனால் ஆனந்த் மட்டுமல்ல, மீன்பிடி பகுதியில், கப்பல்களின் போக்குவரத்து அதிகரித்துள்ளதால், வாணிபக் கப்பல்கள் மோதி, பல மீனவர்கள் உயிரிழந்துள்ளதாக மீனவர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
   இது குறித்து, சென்னை துறைமுக அதிகாரிகளிடம் பேசியபோது பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும் சமீப காலத்தில் விபத்துக்கள் கணிசமாக குறைந்திருப்பதாகவும் தெரிவித்தனர்.

COMMENTS

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING
HELP US FOR GLOBAL COOLING