Color Scrolling

பசுமையை காப்பதே அவசரக் கடமை!****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.!******மரம்வளர்ப்போம்! மானுடம் காப்போம்!!GREEN COVER IS THE ONLY IMMUNITY AGAINST GLOBAL WARMING !

Scrolling

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடும் பணி இன்று தொடங்கியது.



         வாயுகசிவு ஏற்பட்டதை அடுத்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடும் பணி இன்று தொடங்கியது. இதற்கான உத்தரவை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நேற்றிரவு பிறப்பித்தது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரும், ஸ்டெர்லைட் அதிகாரிகளும் இதனை உறுதிப்படுத்தி உள்ளனர். அரசின் உத்தரவு கிடைத்தை அடுத்து, ஆலையை மூடும் பணி தொடங்கி உள்ளதாகவும் எனினும், பாதுகாப்பான முறையில் ஆலையை முழுமையாக மூட 24 மணி நேரம் ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆலைக்கு வழங்கப்பட்டு வரும் மின் இணைப்பை துண்டிக்கும் பணியில் தமிழ்நாடு மின்சார வாரியமும் ஈடுபட்டுள்ளது. 
      கடந்த 23ம் தேதியன்று தூத்துக்குடியில் விஷவாயு கசிவு ஏற்பட்டது. அப்பகுதி மக்களுக்கு கண் எரிச்சல், சுவாசக் கோளாறு ஏற்பட்டது.
     ஸ்டெர்லைட் நிறுவனத்தில் இருந்து வெளியான சல்பர் டை ஆக்சைடு காற்றில் கலந்ததால் தான் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளதுதூத்துக்குடி கோட்டாட்சியர் தலைமையில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடத்திய ஆய்வில் இது தெரியவந்தது.
    இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று வலியுறுத்தி தொடர்ந்து ம.தி.மு.க., சி.பி.எம்., சி.பி.ஐ.உள்ளிட்ட  பல்வேறு அரசியல் கட்சிகள் முற்றுகைப் போராட்டங்கள் நடத்தின என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டெர்லைட் நிறுவனம் - பின்னணி
    வாயுக்கசிவு காரணமாக மூடப்பட்டிருக்கும் ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம் குறித்த சில தகவல்களை இப்போது பார்க்கலாம். ஸ்டெர்லைட் நிறுவனம், பிரிட்டனில் வாழும் அனில் அகர்வால் என்பவரை தலைவராகக் கொண்ட வேதாந்தா குழுமத்தின் துணை நிறுவனமாகும். வேதாந்தா குழுமத்திற்கு தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பிற பகுதிகளிலும் ஆலைகள் உள்ளன. குறிப்பாக தாமிர உருக்காலை நிறுவனம் முதலில் மகாராஷ்டிர மாநிலத்தில் தொடங்கப்பட இருந்தது. ஆனால் அங்கு எதிர்ப்பு தெரிவித்ததால் நிறுவனம் தொடங்கும் திட்டம் தூத்துக்குடிக்கு மாற்றப்பட்டது.

    1993ல் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவால் அடிக்கல் நாட்டப்பட்டபோதே ஆலைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இருப்பினும் தாமிர உருக்காலை அமைப்பதற்கான பணிகள் படிப்படியாக நடந்துமுடிந்து 1996ஆம் ஆண்டு ஆலை உற்பத்திக்கான அனுமதியை அப்போதைய திமுக அரசு வழங்கியது. இதையடுத்து 1997ஆம் ஆண்டு முதல் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை செயல்பட்டுவருகிறது.
    தொடக்கத்தில் 40ஆயிரம் டன்னாக இருந்த தாமிரம் உற்பத்தி 2005ல் 3 லட்சம் டன்னாகவும் தற்போது 4 லட்சம் டன் என்ற அளவிலும் இருந்து வருகிறது. 2007ஆம் ஆண்டு நியூயார்க் பங்குச் சந்தையில் இடம்பெற்றதன்மூலம் அங்கு இடம்பிடித்த முதல் இந்திய உலோக மற்றும் சுரங்க நிறுவனம் என்ற சிறப்பை பெற்றது ஸ்டெர்லைட்.
    தூத்துக்குடியில் தாமிரம் உற்பத்தி செய்வதற்காக கந்தக அமில ஆலை உள்ளிட்ட பல ஆலைகள் ஸ்டெர்லைட் வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளன. இந்த தாமிர உருக்கு ஆலை மூலம் சுமார் 4ஆயிரம் பேர் நேரடியாகவும் 10ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுவதாக கூறப்படுகிறது. ஸ்டெர்லைட் நிறுவனம், மன்னார் வளைகுடாவில் இருந்து 25 கிலோமீட்டருக்கு அப்பால் அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
   ஆனால் 15கிலோமீட்டர் தொலைவிலேயே ஆலை அமைந்திருப்பதாகவும் சுற்றுசூழல் விதிகளை மீறியதாகவும் அந்த ஆலை மீது வழக்கு தொடரப்பட்டது.
   இந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம், ஆலை செயல்பட கடந்த 2010ஆம் ஆண்டு தடை விதித்தது. இதன் மீதான மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்தது.
   அதேநேரத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரும் வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் வரும் 2ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பும் வெளியாக உள்ளது.

COMMENTS

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING
HELP US FOR GLOBAL COOLING