Color Scrolling

பசுமையை காப்பதே அவசரக் கடமை!****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.!******மரம்வளர்ப்போம்! மானுடம் காப்போம்!!GREEN COVER IS THE ONLY IMMUNITY AGAINST GLOBAL WARMING !

Scrolling

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com

வலுக்கும் மாணவர் போராட்டங்கள்:


    லங்கை அதிபர் ராஜபக்சவை, போர்க்குற்றவாளி என அறிவிக்கக்கோரி, நான்காவது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர் தருமரி அரசு கலைக்கல்லூரி மாணவர்கள். அவர்களில், 15 பேரின் உடல் நிலை மோசமானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இலங்கையில் தனி ஈழம் அமையும் வரை போராட்டம் ஓயாது என்கின்றனர் மாணவர்கள்.

கோவையில் வேளாண் பல்கலை மாணவர்கள் போராட்டம்: கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தவிர சட்டக்கல்லூரி மாணவர்கள், பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 
கோவை மருதமலை கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறுவதால், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ராஜபக்சவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

வேளாண் பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை:கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை அறிவித்து நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல்2ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லையில் ரயில் மறியல்: நெல்லையில் 8வது நாளாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாவர்களுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியினர் ரயில் மறியலில் ஈடுபட்டனர்.
சென்னையில் ஒன்று திரண்டுள்ள மாணவர்கள்சென்னை அரும்பாக்கத்தில் இருக்கும் சித்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கைக்கும், மத்திய அரசுக்கும் எதிராக  கோஷங்களை எழுப்பி வருகின்றனர். இளங்கலை, முதுகலை பயிலும் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து ராஜபக்ச உருவப்படத்தை செருப்பால் அடிக்கும் போராட்டத்திலும் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மதுரையில் கண்டனப் பேரணி: தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கை மீது, பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் சட்டக் கல்லூரி மாணவர்கள் 6 பேர் ஆறாவது நாளாக பட்டினிப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் உறுதியான நிலைப்பாடு எடுக்கத் தயங்கும் மத்திய அரசைக் கண்டித்து, மன்னர் கல்லூரி மாணவர்கள் சார்பில் மதுரையில் கண்டனப் பேரணி நடைபெற்றது. 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மதுரையில் மன்னர் கல்லூரியில் இருந்து மாவட்ட நீதிமன்றம் வரையில் கண்டனப் பேரணி நடைபெறுகிறது. 
திண்டுக்கல்லில் பொறியியல் கல்லூரி மாணவர்கள் போராட்டம்:
திண்டுக்கல்லில், தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் இன்று வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்.திண்டுக்கல் கரூர் சாலையில் உள்ள ஆர்விஎஸ் பொறியியல் கல்லூரி வாயில் முன்பு சுமார் 3 ஆயிரம் மாணவர்கள் சாலைமறியல் போராட்டம் நடத்தினர்.. இலங்கை அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பிய அவர்கள், ராஜபக்சேவின் உருவபொம்மையை எரித்தனர். மாணவர்களின் போராட்ட களத்திற்கு வந்த காவல்துறையினர் மாணவர்களை சமாதானப்படுத்தி போராட்டத்தை கைவிடச் செய்தனர்.. பின்னர் போக்குவரத்து சீர்செய்யப்பட்டது.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&



ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்து விலகப் போவதாக திமுக தலைவர் கருணாநிதி எச்சரிக்கை 

    
              ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து விலகப் போவதாக எச்சரிக்கை விடுத்த திமுக தலைவர் கருணாநிதியை, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் ஆகியோர் இன்று மாலை சந்தித்தனர்.
     இலங்கைத் தமிழர் விவகாரத்தில், சாதகமான முடிவை மத்திய அரசு எடுக்காவிட்டால், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்து விலகப் போவதாக திமுக தலைவர் கருணாநிதி எச்சரிக்கை விடுத்திருந்தார்.
        மேலும் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தில், இந்தியா திருத்தம் கொண்டு வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.
      இந்நிலையில் அவரை சமாதானப்படுத்தும் வகையில், இது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவாக தெரிவிக்கப்படுகிறது.
      இந்தச் சூழலில் இந்த சந்திப்பு நடைபெறுவது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
      இதேவேளை, விமான நிலையத்தில் அவர்களுக்கு மதிமுகவினர் கருப்புக் கொடி காட்ட முயற்சி செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
     பொலிசார் கறுப்பு கொடி காட்ட முயன்றவர்களை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

COMMENTS

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING
HELP US FOR GLOBAL COOLING