Color Scrolling

பசுமையை காப்பதே அவசரக் கடமை!****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.!******மரம்வளர்ப்போம்! மானுடம் காப்போம்!!GREEN COVER IS THE ONLY IMMUNITY AGAINST GLOBAL WARMING !

Scrolling

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com

தடுப்பு மருந்துகளில் ஆயுட் காலம் முடிந்த பின்னரும் விற்பனை செய்யப்பட்டு வரும் அவலம்


 பச்சிளம் குழந்தைகளுக்கு வழங்கப்படும் தடுப்பு மருந்துகளில் சிலவற்றின் ஆயுட் காலம் முடிந்த பின்னரும் புதியதாக லேபிள் ஒட்டப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வரும் அவலம் தொடர்ந்து வருகிறது.
பிறந்து 10 முதல் 14 வாரங்கள் வரை ஆன குழந்தைகளுக்கு, சில உயிர்கொல்லி நோய்களில் இருந்து காத்துக் கொள்வதற்காக பெண்டாவேலண்ட், ஈஸிஃபைவ் டிடி என்ற தடுப்பு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. இது பாட்டிலில் அடைக்கப்பட்டு பல்வேறு மருந்தகங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பயன்பாட்டுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.
2011 ஆம் ஆண்டு விற்பனைக்கு வந்த இந்த மருந்தின் ஆயுட்காலம் கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்தும், அவை புதியதாக 2014 வரை அதன் ஆயுட்காலம் இருப்பதைப் போன்று லேபிள் ஒட்டப்பட்டு சென்னையில் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்யப்படுகின்றன.
இதனிடையே அதைப்பற்றி தகவலறிந்த தமிழ்நாடு மருந்துக் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் புரசைவாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருந்து விற்பனை மையத்தில் சோதனையிட்டனர்.
அதில் மருந்துப் பொருட்களின் விற்பனை விதிமுறைகளுக்கு மாறாக ஒரே பாட்டிலில் 2 லேபிள்கள் ஒட்டப்பட்டு விற்பனை செய்வதோடு அந்த மருந்து 2 முதல் 5 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் வைக்கப்பட்டு விற்பனை செய்ய வேண்டும் என்ற விதிமுறையும் மீறப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கடந்த 18 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை சென்னையில் 9 இடங்கள் உட்பட தமிழகம் முழுவதும் 38 மொத்த விற்பனை மையங்களில் சோதனை நடத்தப்பட்டதோடு அந்த மருந்திற்கு சீல் வைத்த அதிகாரிகள் அந்த மருந்தினை தமிழகம் முழுவதும் விற்பனை செய்வதற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளனர்.
மேலும், இந்த சோதனை நடந்து கொண்டிருக்கும் போதே சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனத்திடம் இருந்து பென்டாவேலன்ட், ஈஸிஃபைவ் டிடி என்ற மருந்திற்கு அதன் ஆயுட்காலத்தை மேலும் ஒரு ஆண்டு நீட்டித்துக்கொள்ள மத்திய மருந்துக் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் அனுமதியளித்துள்ள கடிதம் தமிழக மருந்துகள் கட்டுப்பாட்டுத்துறைக்கு அனுப்பப்பட்டிருந்தது.
இதனைத்தொடர்ந்து கடிதத்தின் உண்மைத் தன்மை , மருந்து பாட்டிலின் மீது 2 லேபிள்கள் ஒட்டப்பட்டதற்கு யார் பொறுப்பு, மற்றும் இந்த மருந்து பயன்படுத்த ஏற்றதா என்பதை அறிந்து கொள்வதற்காக தமிழக அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனத்தின் டெல்லி அலுவலகத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அந்த மருந்து நிறுவனம் தனது மருந்துகளை காரணம் கூறாமல் திரும்ப பெற்றுக்கொள்ளத் தொடங்கியுள்ளது.
இந்த நிகழ்வு மருத்துவ வட்டாரத்தில் பெரும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது.
மேலும், இந்த நிறுவனம் ஏற்கனவே முறைகேடுகளில் ஈடுபட்டதால், அதன் மருந்துக்கு பல வெளிநாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

COMMENTS

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING
HELP US FOR GLOBAL COOLING