Color Scrolling

பசுமையை காப்பதே அவசரக் கடமை!****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.!******மரம்வளர்ப்போம்! மானுடம் காப்போம்!!GREEN COVER IS THE ONLY IMMUNITY AGAINST GLOBAL WARMING !

Scrolling

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com

காங்கிரஸ் கட்சிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்திய ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு ஊழல்



    2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு நடத்திய விசாரணையின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வரைவு அறிக்கையில், தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள் காங்கிரஸ் கட்சிக்குச் சாதகமாக இருப்பதாக பாரதிய ஜனதா, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
ஆனால், இந்த அறிக்கை குறித்து தற்போது கருத்து தெரிவிக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை எனத் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, நாடாளுமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யும் போது இதுபற்றி விவாதிப்பதே முறையானதாக இருக்கும் எனக் கருத்து தெரிவித்துள்ளது.
2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் மத்திய அரசுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டதாக, மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி, கடந்த 2009-ம் ஆண்டு வெளியிட்ட அறிக்கை மத்திய அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது.
இதன் பின்னர் இதுகுறித்து விசாரிக்க பி.சி.சாக்கோ தலைமையிலான நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களுக்கு, இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வரைவு அறிக்கை வழங்கப்பட்டது.
அதில், ஸ்பெக்ட்ரம் முறைகேட்டிற்கு ஆ.ராசாவே முழுப் பொறுப்பு என்றும், இதில் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தொடர்பில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
பிரதான எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. பிரதமர் மற்றும் காங்கிரஸ் பிரமுகர்களை பாதுகாக்கும் நோக்கத்துடன் அந்தக் கட்சி தயாரித்த அறிக்கையைப் போல் இது இருப்பதாகவும் பாரதிய ஜனதா கருத்து தெரிவித்துள்ளது.
இதனிடையே, ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் ஆ.ராசாவுக்கு முழுப் பொறுப்பு இருப்பதாக நாடாளுமன்ற கூட்டுக்குழு வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதற்கு, திமுக தலைவர் கருணாநிதி எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். ஒரு அமைச்சர் எப்படி பிரதமரை தவறாக வழி நடத்த முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு முறைகேட்டில் கைது செய்யப்பட்ட ஆ.ராசா, இந்த விவகாரம் தொடர்பாக இன்று செய்தியாளர்களுக்கு விளக்கமளித்தார். தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க, 100 பக்க அறிக்கை ஒன்றை நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு நாளை அனுப்ப இருப்பதாகவும் அவர் கூறினார்.
நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் இடம்பெற்றுள்ள திமுகவை சேர்ந்த திருச்சி சிவா, ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான வரைவு அறிக்கை, அவசர கதியில் தயாரிக்கப்பட்டது எனக் கருத்து தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நாடாளுமன்ற கூட்டுக்குழு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது இறுதியான அறிக்கை அல்ல என்று காங்கிரஸ் கட்சி விளக்கமளித்துள்ளது.
இந்த அறிக்கை முதற்கட்டமாக தயாரிக்கப்பட்டது. இது அங்கீகரிக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அதுபற்றி நாம் விவாதிப்பதே முறையானதாக இருக்கும். அதுமட்டுமல்ல தற்போது தயாரிக்கப்பட்ட வரைவு அறிக்கையில் எடுக்கப்பட்ட முடிவுக்கு, அதில் என்ன காரணம் சொல்லப்பட்டிருக்கிறது என்பது பற்றி யாருக்கும் தெரியாது. எனவே, இந்த விவகாரத்தில் முன்கூட்டியே எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும் ஒரு யூகத்தின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்திய ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு ஊழல், தற்போது டெல்லி அரசியலில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
பிரதமர் மற்றும் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை காப்பாற்றும் நோக்கத்துடன் நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
வரும் 25-ம் தேதி கூடும் நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில், இந்த விவகாரம் தொடர்பாக புயலைக் கிளப்பத் திட்டமிட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.

COMMENTS

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING
HELP US FOR GLOBAL COOLING