Color Scrolling

பசுமையை காப்பதே அவசரக் கடமை!****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.!******மரம்வளர்ப்போம்! மானுடம் காப்போம்!!GREEN COVER IS THE ONLY IMMUNITY AGAINST GLOBAL WARMING !

Scrolling

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com

பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக பாக்கு மட்டை


    பிளாஸ்டிக் கழிவு எனும் வெடிகுண்டு, இந்தியாவை அச்சுறுத்தி வருவதாக உச்சநீதிமன்றம் அண்மையில் எச்சரித்துள்ளது.
   சென்னையில் மட்டுமே, தினமும் 429 டன் பிளாஸ்டிக் கழிவு உற்பத்தியாவதாக சொல்லப்படுகிறது. அதனால், பிளாஸ்டிக்கிற்கு மாற்றான பொருளை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இயற்கைச் சூழலை பாதிக்கும் பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக, புதிய பொருட்களை பயன்படுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது. அந்த வரிசையில், தர்மபுரி மாவட்ட மகளிர் சுய உதவிக்குழுவினர் பிளாஸ்டிற்கு பதிலாக பாக்கு மட்டையை கையிலெடுத்துள்ளனர்.

 சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு, இன்றைய மனித வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாக மாறிவருகிறது. இது குறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உட்பட பலரும் அறிவுறுத்தினாலும், அதனை நம்மவர் யாரும் கண்டுகொள்வதாக இல்லை.

 இந்நிலையில் சுற்றுச் சூழலைக் காக்கும் வகையில், பிளாஸ்டிக் தட்டுகளுக்கு மாற்றாக, பாக்கு மட்டைகளில் தட்டுகளை தயாரித்து வருகின்றனர் தருமபுரி மாவட்டம், கொட்டுமாரனஅள்ளி கிராமப் பெண்கள். பாக்கு மட்டையின் மூலமாக பெரிய மற்றும் சிறிய உணவுத்தட்டுக்கள், பிரசாத தட்டுக்கள், பூஜைத் தட்டுக்கள் என பலவற்றைத் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.
 
 பிளாஸ்டிக் தட்டுகளை விரும்பாதவர்கள், பாக்கு மட்டையாலான தட்டுக்களைத் தேடிவந்து வாங்கிச் செல்வதால், தங்களின் தொழிலுக்கு நல்ல வரவேற்பு உள்ளதாக மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர் இந்த சுய உதவிக் குழுவினர்.
   பல்வேறு வடிவங்களிலும், அளவுகளிலும் தயாரிக்கப்படும் இந்த பாக்கு மட்டைத் தட்டுக்களுக்கு சந்தை வாய்ப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் குறிப்பிடுகின்றார் தருமபுரி மாவட்ட சுயஉதவிக் குழுக்களுக்கான உதவித்திட்ட அலுவலர் ஹரிசெல்வம்.

 இப்படி ஏராளமான விற்பனை வாய்ப்புகள் இருப்பதால், கிராமப்புற மகளிர் ஒருங்கிணைந்து, சுய உதவிக் குழுக்களாக சேர்ந்து இத்தொழிலைத் தொடங்கினால், அதற்கு தேவையான வங்கிக் கடனுதவியை அரசு வழங்கி வருகிறது.
   சுற்றுச்சூழலைக் காப்பதோடு, கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தையும் உயர்த்த உதவும் இந்த பாக்கு மட்டைத்தொழில், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு மட்டுமன்றி, பிற சுயதொழில் முனைவோருக்கும் ஏற்றது என்றே சொல்லலாம். நீண்டகால அடிப்படையில் இதுவும் உறுதியான தொழிலாக மாறும் வாய்ப்புள்ளது என்பதே பாக்கு மட்டை தட்டு தயாரிக்கும் தொழில் குறித்து, இத்துறை ஆலோசகர்களின் கருத்து.






COMMENTS

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING
HELP US FOR GLOBAL COOLING